douglas devananda 1
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஆதிசிவன் ஆலயம் மீண்டும் கட்டியெழுப்பப்படும்!

Share

துஷ்டர்களினால் சின்னா பின்னமாக்கப்பட்ட நெடுங்கேணி ஆதிசிவன் ஆலயத்தை விரைவில் மீண்டும் அமைப்பது தொடர்பாக அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டு உள்ளதாகவும், அதற்கு ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் ஆதரவாக இருப்பதாக அமைச்சர் டக்ளஸ் கடற்றொழில் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி நகர பஸ் நிலையத் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய போதே மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்த  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இன – மத ரீதியான வன்முறைகளுக்கு தற்போதைய அரசாங்கம் இடமளிக்காது என்றார்.

அமைச்சர் ஜீவன் தொண்டமானும்  தன்னோடு இணைந்து வெடுக்குநாறி விவகாரம் தொடர்பாக  அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வந்ததாகவும் சுட்டிக்காட்டினார்.

அதேபோன்று, நெடுந்தீவு வெடியரசன் கோட்டை  பகுதியில் காட்சிப்படுத்தப்பட்ட தொல்லியல் சின்னம் பற்றிய அறிவிப்பு பலகை தொடர்பாக உரிய தரப்புக்களுடன் கலந்துரையாடிய நிலையில், குறித்த அறிவிப்பு பலகை தற்போது நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதேவேளை, கிளிநொச்சி பஸ் மத்திய நிலையம் தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர்,

“இலங்கை போக்குவரத்து சபையினரும்  தனியார் போக்குவரத்து சங்கத்தினரும் ஒற்றுமையுடன் செயற்படுவதன் மூலமே மக்களுக்கு சிறந்த சேவையை பஸ்  நிலையத்தினூடாக வழங்கக் கூடியதாக இருக்கும்.

இந்த இரண்டு நிறுவனங்களும் மக்கள் சேவையை மனதில் கொள்ளாமல் இலாபமீட்டும் நோக்கில்  செயற்படுவதாலேயே பிரச்சினைகள் எழுகின்றன.  இதனால் பேருந்துகளில் பயணிப்போர் மாத்திரமல்ல வீதியில்  செல்வோரும் பாதிக்கப்படுகிறார்கள்.

எனவே பிரதான வீதிகளில் போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்களின் வேகக் கட்டுப்பாடு தொடர்பாக யாழ். மாவட்டத்தில் நடைபெறும் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின்போது ஆராயவுள்ளதுடன், இது தொடர்பில் யாழ் உட்பட வடமாகாணத்தின் ஏனைய மாவட்ட தலைவர்களிடமும்  பொலிஸ் உயரதிகாரிகளுடனும்  கேட்டுக்கொள்ள இருக்கின்றேன்” என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...