gotabaya rajapaksa with mahinda rajapaksa 2
அரசியல்இலங்கைசெய்திகள்

‘113 இல்லையேல் நாளையே பதவி விலகுவேன்’ – மஹிந்த அதிரடி அறிவிப்பு

Share

பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு நம்பிக்கை தெரிவிக்கும் பிரேரணையில் கையொப்பம் திரட்டும் நடவடிக்கையை ஆளுங்கட்சி ஆரம்பித்துள்ளது.

113 உறுப்பினர்களின் ஆதரவை இலகுவில் பெற்றுவிடலாம் என பஸில் தரப்பு கருதினாலும், மேற்படி பிரேரணையில் இன்னும் 100 எம்.பிக்கள்வரைகூட கையொப்பம் இடவில்லை என தெரியவருகின்றது.

நாளைய தினமும் கையொப்பம் திரட்டப்படவுள்ளது. மேற்படி பிரேரணையில் 113 உறுப்பினர்கள் கையொப்பம் இடாவிட்டால், அடுத்த நொடியே தான் பதவி விலகுவார் என ஆளுங்கட்சி உறுப்பினர்களிடம் மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

ஆளுங்கட்சிக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் தற்போது 103 ஆசனங்கள் வரையே காணப்படுகின்றன. எனவே, பதவி துறக்கும் அறிவிப்பை மஹிந்த விடுவாரென எதிர்பார்க்கப்படுகின்றது.

மகாநாயக்க தேரர்கள் சங்க பிரகடனத்தை வெளியிட்டுவிட்டால், அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிடும். எனவே, அந்த அறிவிப்புக்கு முன்னர் மஹிந்த விலகக்கூடும் என தெரியவருகின்றது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Semmani Manhole
இலங்கை

எழுமாறாக தோண்டப்பட்ட குழிகளிலும் எலும்புக்கூடுகள்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட 101 நாள் அகழ்வுப் பணிகளில் மொத்தம் 515 மனித...

Namal
இலங்கை

நாங்கள் மனித நேயத்துடன் மட்டுமே செயலாற்றுவோம் – நாமல்.

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, மொட்டுக் கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்...

Court order
இலங்கை

மீண்டும் நீதிமன்றுக்கு வந்த பவானி வீதி வழக்கு – நீதிமன்று வழங்கிய தீர்ப்பு !

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி காவல்துறையினரின் சார்பில்...

Weaponsgdg
இலங்கை

கலவரத்தினை கட்டுப்படுத்த ஏற்பட்ட தாமதம் – சிறைகளில் உள்ள ஆயுத பற்றாக்குறைகள்

நாட்டில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத...