gotabaya
அரசியல்இலங்கைசெய்திகள்

நாளை சர்வகட்சி மாநாடு!

Share

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நாளை (23) முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் சர்வகட்சி மாநாடு நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின்போது எட்டப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் குறித்த சர்வகட்சி மாநாடு கூட்டப்பட்டுள்ளது.

இதன்படி நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அங்கீகரிக்கப்பட்ட 27 அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும், குறித்த மாநாட்டில் பங்கேற்காதிருக்க முக்கியமான கட்சிகள் முடிவெடுத்துள்ளன.

இதன்படி ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, ஜனநாயக மக்கள் முன்னணி, மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம் , அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் , தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி , ரெலோ, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் , தேசிய சுதந்திர முன்னணி , பிவிதுரு ஹெல உறுமய, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் புறக்கணிக்கும் தீர்மானத்தை எடுத்துள்ளன.

அத்துடன், ஜனநாயக இடதுசாரி முன்னணி, இலங்கை கம்யூனிஸ் கட்சி, முஸ்லிம் தேசியக் கூட்டணி , தேசிய காங்கிரஸ் ஆகியனவும் மாநாட்டை புறக்கணிக்கும் முடிவை எடுக்கக்கூடும் என அறியமுடிகின்றது.

அதேவேளை, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி , லங்கா சமாமஜக்கட்சி , எமது மக்கள் சக்தி கட்சி, ஈபிடிபி, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி , மக்கள் ஐக்கிய முன்னணி, தமிழ் அரசுக்கட்சி, புளொட், ஐக்கிய தேசியக்கட்சி ஆகியன மாநாட்டில் பங்கேற்கவுள்ளன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Semmani Manhole
இலங்கை

எழுமாறாக தோண்டப்பட்ட குழிகளிலும் எலும்புக்கூடுகள்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட 101 நாள் அகழ்வுப் பணிகளில் மொத்தம் 515 மனித...

Namal
இலங்கை

நாங்கள் மனித நேயத்துடன் மட்டுமே செயலாற்றுவோம் – நாமல்.

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, மொட்டுக் கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்...

Court order
இலங்கை

மீண்டும் நீதிமன்றுக்கு வந்த பவானி வீதி வழக்கு – நீதிமன்று வழங்கிய தீர்ப்பு !

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி காவல்துறையினரின் சார்பில்...

Weaponsgdg
இலங்கை

கலவரத்தினை கட்டுப்படுத்த ஏற்பட்ட தாமதம் – சிறைகளில் உள்ள ஆயுத பற்றாக்குறைகள்

நாட்டில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத...