20220131 232802 scaled
செய்திகள்இந்தியாஇலங்கை

அத்துமீறி நுழைந்த இந்திய இழுவைப் படகு பருத்தித்துறை மீனவர்களால் மடக்கிப் பிடிப்பு!!

Share

பருத்தித்துறை கடற்பரப்புக்குள் அத்துமீறி தொழிலில் ஈடுபட்ட இந்திய இழுவைப் படகு உள்ளூர் மீனவர்களினால் முற்றுகையிட்டு மடக்கிப் பிடிக்கப்பட்டது.

உள்ளூர் மீனவர்களினால் தடுத்து வைக்கப்பட்ட இந்திய இழுவைப் படகு இலங்கை கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டதுடன் அதிலிருந்த இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.

இந்தச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு இடம்பெற்றது.

இந்தச் சம்பவத்தில் சமரச முயற்சியில் ஈடுபட்ட கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்துக்களை ஏற்க பருத்தித்துறை மீனவர்கள் மறுத்ததுடன் அவரை இந்த விடயத்தில் தலையிட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டனர்.

இந்திய இழுவைப் படகு நேற்று பின்னிரவு பருத்தித்துறை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதை அவதானித்த சுப்பர்மடம் மீனவர்கள் பருத்தித்துறை மீனவர்களுடன் இணைந்து 9 படகுகளில் சென்று முற்றுகையிட்டனர்.

இந்திய இழுவைப் படகை தடுத்து நிறுத்திய உள்ளூர் மீனவர்கள் அந்தப் படகிலிருந்த வலைகள் மற்றும் மீன்களை கைப்பற்றினர்.

சம்பவத்தையறிந்து அங்கு விரைந்த இலங்கை கடற்படை இந்திய இழுவைப் படகை கையகப்படுத்தியதுடன் அதிலிருந்த மீனவர்களைக் கைது செய்து காங்கேசன்துறை கடற்படைத் தளத்துக்கு அழைத்துச் சென்றனர்.

கரை திரும்பிய பருத்தித்துறை மீனவர்கள் இந்திய மீனவர்களுக்கு எதிரான போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

20220201 000118 20220131 233123

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
IGP C. D. Wickramaratne
இலங்கை

சி.டி. விக்கிரமரத்னவின் 16 ஆண்டு கால மெய்ப்பாதுகாவலர் வழங்கிய சாட்சியம்.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் தொடர்பான நீதவான்...

Missing Persons 1
இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் எந்த நீதியும் கிடைக்கவில்லை – விஜயகுமார்.

வடக்குக் கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஆராய்வதற்காக உருவாக்கப்பட்ட சங்கங்கள் மற்றும் ஒன்றியங்களில் அனுபவம் மிக்கவர்கள்...

அச்சுறுத்த
இலங்கை

அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் கலை.

இசையமைப்பாளர் பூவன் மதீசன், சமூக பிரச்சினைகளை பாடல்களில் எடுத்துக் கூறியதால் பல அச்சுறுத்தல்களை சந்தித்ததாக தெரிவித்துள்ளார்....

dead body 3
இலங்கை

வயோதிப பெண் மரணம் – தொடரும் தீவிர விசாரணைகள்.

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பச்சநூர் பகுதியில் உள்ள வீடொன்றில் வயதான தம்பதியினர் இருவரும் தனியாக...