Missing Persons 1
இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் எந்த நீதியும் கிடைக்கவில்லை – விஜயகுமார்.

Share

வடக்குக் கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஆராய்வதற்காக உருவாக்கப்பட்ட சங்கங்கள் மற்றும் ஒன்றியங்களில் அனுபவம் மிக்கவர்கள் தற்பொழுது இல்லை என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் விஜயகுமார் தெரிவித்திருந்தார்.

பிரபல ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், “இப்பொழுது காணப்படுகின்ற காணாமல் ஆக்கப்பட்டோர் சம்மந்தமான ஒன்றியங்கள் மற்றும் சங்கங்களில் அன்றைய காலங்களில் இருந்தவர்கள் இருப்பதாகத் தெரியவில்லை.

அத்துடன், நாங்கள் நீண்டகாலமாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் குறித்து பல போரட்டங்களை முன்னெடுத்திருந்ததுடன் பல்வேறுபட்ட தரப்பினரை நேரிலும் சந்தித்து அவர்களுக்கான நியாயங்களை கேட்டிருந்தோம்.

இருப்பினும், எங்களுக்கான நியாயம் இதுவரையிலும் கிடைக்கவில்லை. இதனால் ஏற்பட்ட விரக்தியினாலேயே தற்போதைய காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கங்களில் எங்களுடைய காலத்தில் இருந்தவர்கள் பங்கேற்பதில்லை” என தான் நினைப்பதாகவும் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
Featuredvdfv
இலங்கை

ஆபத்தான ஆயுதங்களுடன் இரத்மலானையில் பலர் கைது!

இரத்மலானை கொனா கோவில பகுதியில் 3 வாள்கள், 1 கோடரி, 3 கத்திகள் மற்றும் உள்நாட்டில்...

dead body 2
இலங்கை

தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்!

இன்றைய தினம், யாழ்ப்பாணம் – நாரந்தனை பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக...

bus bike accident
இலங்கை

சற்று முன்னர் இடம்பெற்ற கோர விபத்து – பலியான வங்கி ஊழியர்!

அனுராதபுரம் – பாதெனிய வீதியில் மோட்டார் சைக்கிளும் தனியார் பேருந்தும் மோதி ஏற்பட்ட கோர விபத்தில்,...

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள்
இலங்கை

உயர் அதிகாரிகளுக்கு திடீரென வழங்கப்பட்ட இடமாற்றங்கள்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றங்களை வழங்க பொலிஸ்...