dead body 3
இலங்கை

வயோதிப பெண் மரணம் – தொடரும் தீவிர விசாரணைகள்.

Share

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பச்சநூர் பகுதியில் உள்ள வீடொன்றில் வயதான தம்பதியினர் இருவரும் தனியாக வசித்து வந்த நிலையில், 73 வயதுடைய பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக மூதூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில்,நேற்றிரவு வீட்டுக்குள் நுழைய முயன்ற மர்ம நபர்கள் இருவர் தங்களைத் தாக்கியதாகவும், குறித்த தாக்குதலிலேயே தனது மனைவி உயிரிழந்ததாகவும் உயிரிழந்த பெண்ணின் கணவர் காவல்துறையினரிடம் கூறியுள்ளார்.

மேற்படி, சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணைகளுக்காக, திருகோணமலை தடயவியல் பிரிவு காவல்துறையினர் மற்றும் மூதூர் பொலிஸாரும் இன்று காலை சம்பவ இடத்திற்குச் சென்று தடயங்களைச் சேகரித்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து, உயிரிழந்த பெண்ணின் கணவர் மேலதிக விசாரணைகளுக்காக மூதூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் தற்போது மூதூர் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மூதூர் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Share
தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...