அஸ்வின்
விளையாட்டு

சூர்யவன்ஷிக்குத் தான் தெரிவித்த கருத்து குறித்து விளக்கம் அளித்துள்ள அஸ்வின்.

Share

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்குத் தான் தெரிவித்த கருத்து குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, அமர்ந்து கொண்டு மற்றவர்களுக்குத் தண்ணீர் கொடுப்பது போன்ற தனது கருத்து அவமானப்படுத்தும் நோக்கில் கூறப்பட்டவை அல்ல என்றும், அது அவருக்கு ஒரு சிறந்த கற்றல் அனுபவமாக இருக்கும்.

இங்கிலாந்து தொடரில் ஜொஃப்ரா ஆர்ச்சரின் பந்துவீச்சில் அவர் தடுமாறினாலும், ஸிம்பாப்வே தொடரில் சிறப்பாக விளையாடியதனையும் அஸ்வின் சுட்டிக்காட்டினார்.

மேலும், சர்வதேச கிரிக்கெட்டில் குறுகிய காலத்திற்குள் ஒரு வீரரை விமர்சித்து ஒதுக்கிவிடக் கூடாது என அவர் கேட்டுக் கொண்டார்.

ஐ.பி.எல் தொடரில் சிறப்பாக ஆடியதால் அவர் மீது அதிக எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளதாகவும், விராட் கோலி அல்லது ரோகித் சர்மா போன்று ஒவ்வொரு போட்டியிலும் நிலைத்து நின்று விளையாடுவார் என எதிர்பார்க்கக் கூடாது என்றும் தெரிவித்த அஸ்வின், கிரிக்கெட்டில் ஏற்றத்தாழ்வுகள் இருப்பது இயற்கை என்றும் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
LPL கிரிக்கெட்
விளையாட்டு

LPL கிரிக்கெட் போட்டிக்கு இலவச நுழைவு வசதி – மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

இன்று, கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ள லங்கா LPL கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியைப்...

Team India Have Arrived In Sri Lanka
விளையாட்டு

இலங்கை வந்தடைந்தது இந்திய அணி.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி, 2025-2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இரண்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக...

Rumesh Tharanga
விளையாட்டு

வரலாற்று சாதனையுடன் இலங்கைக்கு கிடைத்த தங்கம்.

இலங்கை வீரரான ருமேஷ் தரங்க , கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில்,...

fifa world cup 2026
விளையாட்டு

FIFA விற்கு விடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கை.

உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகளின் பங்குகளைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்கும் திட்டத்தை சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு...