fifa world cup 2026
விளையாட்டு

FIFA விற்கு விடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கை.

Share

உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகளின் பங்குகளைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்கும் திட்டத்தை சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு முன்னோக்கி கொண்டு சென்றால், அதன் அனைத்துப் போட்டிகளையும் புறக்கணிப்போம் என ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

குறித்த முடிவை நேற்று நடைபெற்ற அவசரக் கூட்டத்தில், அதன் 55 உறுப்பினர் நாடுகளும் ஒருமனதாக எடுத்துள்ளன.

உலகக் கிண்ணம் மற்றும் பிற முக்கியமான போட்டிகளின் உரிமைகளைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு மாற்றும் ஃபிஃபாவின் திட்டத்திற்கு ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு தனது கடுமையான எதிர்ப்பினையும் வெளிப்படுத்தியுள்ளது.

இது குறித்து ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகக் கிண்ணத்தை ஒரு வணிக முதலீட்டுப் பொருளாகப் பார்க்க முடியாது என்றும், இது கால்பந்து விளையாட்டின் மிகப்பெரிய வரலாற்றுச் சொத்துக்களில் ஒன்றாகும். இதன் எந்தவொரு பகுதியையும் தனியார் முதலீட்டாளர்களுக்குக் விட்டுக் கொடுக்கக் கூடாது. உலகக் கிண்ணம் ஒருபோதும் விற்பனைக்கு உரியது அல்ல,” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்தத் திட்டம் கைவிடப்பட்டு, இனி வரும் காலங்களில் போட்டிகளையோ அல்லது அதன் நிர்வாகத்தையோ தனியாருக்குத் தரமாட்டோம் என்று உறுதியளிக்கும் வரை, ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பின் எந்தவொரு தேசிய அணியும் ஃபிஃபா நடத்தும் எந்தப் போட்டியிலும் பங்கேற்காது என்றும் கூறியுள்ளது.

ஃபிஃபா தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ, ‘ஃபிஃபா ஃபார்வர்ட் என்டர்பிரைஸ்’ (FFE) என்ற வணிகச் துணை நிறுவனத்தைத் தொடங்கி, அதன் மூலம் உலகக் கிண்ணம் மற்றும் பிற வணிக நடவடிக்கைகளைக் கவனிக்கத் திட்டமிட்டிருந்தார்.

கால்பந்து அமைப்புகளுடன் எந்தவொரு கலந்தாலோசனையும் செய்யாமல், இரகசியமாக இந்த முடிவை எடுக்க முயன்றதாக ஃபிஃபா மீது ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

இந்நிலையில், இந்த புதிய நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகள் ஃபிஃபாவிடமே இருக்கும் என்றும், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்குச் சிறுபான்மை பங்குகள் மட்டுமே வழங்கப்படும் என்றும் ஃபிஃபா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருப்பினும், அந்த விளக்கத்தை ஏற்க மறுத்துள்ள ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு, தனது புறக்கணிப்பு முடிவில் தீர்க்கமாகவுள்ளது.

Share
தொடர்புடையது
LPL கிரிக்கெட்
விளையாட்டு

LPL கிரிக்கெட் போட்டிக்கு இலவச நுழைவு வசதி – மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

இன்று, கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ள லங்கா LPL கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியைப்...

Team India Have Arrived In Sri Lanka
விளையாட்டு

இலங்கை வந்தடைந்தது இந்திய அணி.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி, 2025-2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இரண்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக...

Rumesh Tharanga
விளையாட்டு

வரலாற்று சாதனையுடன் இலங்கைக்கு கிடைத்த தங்கம்.

இலங்கை வீரரான ருமேஷ் தரங்க , கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில்,...

அஸ்வின்
விளையாட்டு

சூர்யவன்ஷிக்குத் தான் தெரிவித்த கருத்து குறித்து விளக்கம் அளித்துள்ள அஸ்வின்.

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்குத்...