who drump
உலகம்

அமெரிக்க அதிபரினால் நெருக்கடிக்குள்ளாகியுள்ள உலக சுகாதார அமைப்பு.

Share

அமெரிக்கா சர்வதேச தடுப்பூசி கூட்டமைப்புக்கு 600 மில்லியன் டொலர் நிதி வழங்குவதாகவும், அதன்மூலம் உலக சுகாதார அமைப்புக்கு வழங்கப்பட்ட நிதியை முழுமையாக நிறுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.

ஆகையினால், WHO-க்கு கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவு மற்றும் சுகாதார அமைச்சகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உத்தரவுப்படி, சுகாதாரத்துறை அமைச்சர் ரொபர்ட் கென்னடி ஜூனியர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோர் காவி அமைப்பில் சில சீர்திருத்தங்களை மேற்கொள்வதை அமெரிக்க நிதியுதவிக்கான நிபந்தனையாக முன்வைத்துள்ளனர்.”

உலகெங்கிலும் தடுப்பூசி விநியோகத்தை விரிவுபடுத்தும் இந்த சர்வதேச திட்டத்திற்கு மீண்டும் நிதியுதவி வழங்குமாறு வலியுறுத்தி வந்த குடியரசுக் கட்சி செனட்டர் சூசன் காலின்ஸ், இந்த முடிவை வரவேற்றுள்ளார்.

அத்துடன், தடுப்பூசிகளில் பாதரசம் பயன்படுத்தப்படுவதைத் தவிர்த்து, மாற்று முறைகளை நோக்கிய கூட்டாண்மையை உருவாக்க காவி அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்டகாலமாக உலக சுகாதார அமைப்புடனான அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் மோதல் போக்கின் தொடர்ச்சியாகவே இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.

இதற்கு முன், கடந்த 2025 ஜனவரியில் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே, உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகும் என்றும், அதற்கான நிதி நிறுத்தப்படும் என்றும் ட்ரம்ப் அறிவித்திருந்தார்.

உலக சுகாதார அமைப்பிற்கு வழங்கப்படும் நிதியுதவி நிறுத்தப்படுவதால், போலியோ, காசநோய், எச்.ஐ.வி (HIV), மலேரியா மற்றும் தட்டம்மை போன்ற நோய்களைத் தடுக்கும் திட்டங்களும், காசா, சூடான் போன்ற போர் மண்டலங்களில் மேற்கொள்ளப்படும் அவசர மருத்துவ உதவிகளும் பெரும் பாதிப்புக்குள்ளாகும் என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Share
தொடர்புடையது
சமூக ஊடகங்களினை
உலகம்

சமூக ஊடகங்களினை கட்டுப்படுத்த அமெரிக்க மக்கள் ஆதரவு!

அமெரிக்க மக்களில் பெரும்பான்மையானவர்கள், சமூக ஊடக நிறுவனங்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் கடுமையான விதிகளை நடைமுறைப்படுத்துவதற்கு...

d n
உலகம்

இஸ்ரேல் பிரதமரால் நிராகரிக்கப்பட்டது அமெரிக்க அதிபரின் திட்டம்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் முன்வைக்கப்பட்ட காசாவுக்கான 15 அம்ச அமைதித் திட்டத்தை இஸ்ரேல் நிராகரித்துள்ளதாக...

feathredmnnkn
உலகம்

இத்தாலியின் விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

இத்தாலியின் எட்னா எரிமலை மீண்டும் சீற்றமடைந்து வருவதால், சிசிலி தீவிலுள்ள கெடானியா சர்வதேச விமான நிலையத்திற்கு...

robo
உலகம்

ட்ரம்ப் நிர்வாகம் எடுத்துள்ள அதிரடி முடிவு – எச்சரித்துள்ள சீனா!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், சீனாவில் தயாரிக்கப்படும் புதிய தரவுமைய சாதனங்களின் இறக்குமதிக்கு தடை...