கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம் செய்து மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் குறித்து பொதுமக்கள் விளிப்புடன் இருக்குமாறு பிரதி அமைச்சரின் அலுவலகம் எச்சரித்துள்ளது.
மேலும், ஒரு தனிநபர் அல்லது குழு, பிரதி அமைச்சராக நடித்து தொலைபேசி அழைப்புகள் செய்து பணம் கோருவதோடு, பிற மோசடி நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதாக முறைப்பாடுகள் வந்துள்ளன.
அவ்வாறான நபர்களுக்கு எந்த பணத்தையும், தனிப்பட்ட தகவல்களையும், ஆவணங்களையும் வழங்க வேண்டாம் என்று பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
சந்தேகத்திற்கிடமான தொலைபேசி அழைப்புகள் அல்லது செய்திகளை பெறுபவர்கள் உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையம் அல்லது தொடர்புடைய அதிகாரிகளுக்குத் தெரிவிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.