unnamed
இந்தியாசெய்திகள்

குடியரசுத் தலைவரைச் சந்திக்கும் ராகுல் காந்தி

Share

இந்தியா லக்கிம்பூர் வன்முறைச் சம்பவம் தொடர்பாக, இந்தியக் குடியரசுத் தலைவரை, நேரில் சந்தித்து ராகுல் காந்தி மனு அளிக்கவுள்ளார்.

உத்தரப் பிரதேசம் லக்கிம்பூரி கேரியில, கடந்த வாரம் வன்முறை இடம்பெற்றிருந்தது.

விவசாயிகள் மீது கார் மோதிய சம்பவத்தையடுத்து 8 பேர் உயிரிழந்திருந்தனர்.

இச்சம்பவத்தில் விவசாயிகள் மீது மோதிய காரில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அவரைக் கைது செய்ய வேண்டும் என, விவசாயிகளும் எதிர்க்கட்சியினரும் வலியுறுத்தினர்.

ஆனால் சம்பவம் நடந்தபோது காரில் தனது மகன் ஆஷிஷ் மிஸ்ரா இல்லை என மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா கூறியிருந்தார்.

இந்த வன்முறை தொடர்பாக உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை மேற்கொண்டிருந்த நிலையில், ஆஷிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளைச் சந்திக்கச் சென்ற காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தடுத்து நிறுத்தப்பட்டு

விளக்கமறியலில் வைக்கப்பட்டார். இதேவேளை, பஞ்சாப் முதல்வர் சன்னி, சத்தீஸ்கர் முதல்வர் பாகல் ஆகியோர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இவையும் தொடர்ந்து பல சர்ச்சைகளை உருவாக்கியிருந்தன.

அத்துடன் லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த பிரியங்கா காந்தி பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில் லக்கிம்பூர் வன்முறை வழக்கில் நியாயமான விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் மூத்த தலைவர்கள் நாளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து மனு அளிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 1200x800 32
செய்திகள்அரசியல்இலங்கை

சமன் ஏக்கநாயக்கவின் பிணை மனு: இன்று தீர்ப்பு! – ஜனாதிபதியின் வெளிநாட்டுப் பயண நிதி விவகாரத்தில் அதிரடி!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயலாளராகப் பணியாற்றிய சமன் ஏக்கநாயக்க, இன்று (18) மீண்டும் கொழும்பு...

image 1200x800 30 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பிறப்புச் சான்றிதழுக்கு ரூ. 1,000 இலஞ்சம்: ஆலையடிவேம்பு உதவிப்பதிவாளர் கையும் மெய்யுமாகக் கைது!

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளராகப் பணியாற்றும் உதவிப்பதிவாளர் ஒருவர், பிறப்புச் சான்றிதழை...

image 1200x800 35 1
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் ஆவணங்கள்: பிரான்ஸ் பிரபலங்கள் மீது பாயும் விசாரணை! – சிறப்புப் புலனாய்வுக் குழு அதிரடி நியமனம்!

அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட 30 லட்சம் பக்கங்கள் கொண்ட எப்ஸ்டீன் கோப்புகளில், பிரான்ஸ் நாட்டின் அரசியல்...

image 1200x800 31 1
செய்திகள்உலகம்

எப்ஸ்டீனுடன் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை! – அதிர்ச்சித் தகவல்களுக்கு டொனால்ட் ட்ரம்ப் அதிரடி விளக்கம்!

பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான 35 லட்சம் பக்கங்கள் கொண்ட இரகசியக் கோப்புகளை அமெரிக்க...