விசாகப்பட்டினத்தில் செயற்பட்டு வரும் உருக்கு ஆலையில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. கம்பிகள் தயார் செய்வதற்காக திரவ நிலையில் இருந்த உருக்கு, குழாயில் இருந்து கசிந்து கொட்டியதால் தீப்பற்றியது.
எனினும் ஆலையில் பொருத்தப்பட்டுள்ள தானியங்கி தீயணைப்புக் கருவிகள் உடனடியாக செயல்பட்டு தீ மேலும் பரவாமல் தடுத்தால் அதன் தாக்கம் குறைந்தது.
பின்னர் தீயணைப்புத்துறையினர் வந்து தீயை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
#SrilankaNews
Leave a comment