1598682810 0047
செய்திகள்உலகம்

ஆர்ட்டிக் திமிங்கிலங்களில் அபாயகரமான வைரஸ் பாதிப்பு: ஆளில்லா விமானங்கள் மூலம் புதிய கண்டுபிடிப்பு!

Share

ஆர்ட்டிக் கடலில் வாழும் திமிங்கிலங்களின் ஆரோக்கியத்தைக் கண்டறிய ஆளில்லா விமானங்கள் (Drones) மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அவற்றுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் கொடிய வைரஸ் ஒன்று பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது.

லண்டன் கிங்ஸ் கல்லூரி மற்றும் நோர்வே நார்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து இந்தத் நவீன ஆய்வை முன்னெடுத்தனர்.

திமிங்கிலங்கள் கடலின் மேற்பரப்பிற்கு வந்து சுவாசிக்கும்போது, அவற்றின் சுவாசத் துளைகள் (Blowholes) வழியாக வெளிவரும் நீர்த்துளிகளை (Snot) ஆளில்லா விமானங்கள் மூலம் விஞ்ஞானிகள் சேகரித்தனர். திமிங்கிலங்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி அவற்றின் ஆரோக்கியத்தைத் தூரத்திலிருந்தே கண்காணிக்க இந்தத் தொழில்நுட்பம் உதவியுள்ளது.

இந்த ஆய்வின் மூலம், கடல்வாழ் பாலூட்டிகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாகக் கருதப்படும் ‘செட்டேசியன் மோர்பில்லிவைரஸ்’ (Cetacean Morbillivirus) ஆர்ட்டிக் வட்டாரப் பகுதியில் பரவி வருவது முதல்முறையாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் மிக வேகமாகப் பரவக்கூடியது. திமிங்கிலங்கள் மற்றும் டொல்பின்கள் பெருமளவில் கூட்டமாகக் கரை ஒதுங்குவதற்கு இந்த வைரஸ் பாதிப்பு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.

இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம், கடலில் நோய்கள் பெரிய அளவில் பரவத் தொடங்கும் முன்பே அவற்றைக் கண்டறிய முடியும். இதன் மூலம் அழிந்து வரும் கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...