வவுனியாவில் தனியார் வகுப்புக்குச் சென்ற சிறுமி கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தாய், தந்தையை இழந்த 16 வயதுடைய ராசேந்திரன் யதுசி என்ற சிறுமி மாமாவின் அரவணைப்பில் வாழ்ந்து வந்த நிலையில் நேற்று மதியம் தனியார் கல்வி...
புத்தளம் மாவட்டம், நவகத்தேகம – முல்லேகம பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. முல்லேகம பகுதியைச் சேர்ந்த 32...
வீடொன்றிலிருந்து தந்தையும் மகளும் உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். களுத்துறை தெற்கு – ஹினட்டியன்கல பகுதியில் நேற்றிரவு இந்தச் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. வீட்டிலிருந்த தாயாரினால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய சடலங்கள் மீட்கப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர். தந்தை...
கோட்டாபய அரசு ஆட்சிக்கு வந்தவுடனேயே 600 மில்லியன் ரூபா வரிச்சலுகையை வழங்கியதன் மூலம் ஒரு சிறு குழுவினர் ஆறுதல் அடைந்தது எனவும், அதன் விளைவாக இன்று முழு நாடும் அழிந்துள்ளது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...
நாடளாவிய ரீதியில் எரிவாயு சிலிண்டர் விநியோக நடவடிக்கை இன்று பிற்பகல் முதல் முன்னெடுக்கப்படும் என்று லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. 12.5 கிலோ கிராம், 5 கிலோ கிராம் மற்றும் 2 தசம் 3 கிலோ கிராம்...
இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கும் இடையில் தொலைபேசியில் முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் உத்தியோகபூர்வ ருவிட்டர் பக்கத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கலந்துரையாடலின்போது, இலங்கையின் தற்போயை...
இதுவரை போராடியவர்களில் 120 பேருக்கு மேல் இறப்பு! நாம் இறக்கும் முன்னாவது நீதி கிட்டுமா?” என்ற ஏக்கத்தோடு முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. முல்லைத்தீவில் தொடரும் தொடர்...
பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை மூடும் திட்டம் எதுவுமில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை பொருளாதார நெருக்கடி காரணமாக மூடவுள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளிவந்திருந்த நிலையில்...
களுத்துறை மாவட்டம், பண்டாரகம – அட்டுலுகம சிறுமி பாத்திமா ஆயிஷா நீரில் மூழ்கடிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் எனப் பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், குறித்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படவில்லை எனவும் சிறுமியின் பிரேத...
பிரபல சமூக ஊடகச் செயற்பாட்டாளரும் அமைதியான போராட்ட இயக்கத்தின் முன்னணிச் செயற்பாட்டாளருமான ‘ரட்டா’ என அழைக்கப்படும் ரனிந்து சேனாரத்ன பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் கொம்பனித்தெருப் பொலிஸாரால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் கோட்டை...
அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது – 02ஆம் பிரிவு சாஹிரா கல்லூரி வீதியில் இன்று பிற்பகல் வீடொன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் வீட்டின் உடமைகள் முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளதுடன் அருகில் இருந்த இரு வீடுகளும் பகுதியளவில்...
யாழ்., வடமராட்சி, அல்வாய் வேலிலந்தை முத்துமாரி அம்மன் ஆலயத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 35ஆவது நினைவேந்தல் நிகழ்வு அல்வாய் மனோகரா சனசமூக நிலையத்தில் அதன் தலைவர் செல்லத்தம்பி சுபேந்திரா தலைமையில் நடைபெற்றது. 1987/05/29 அன்று குறித்த ஆலயத்தில்...
மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் இன்று முதல் இரண்டு வாரங்களுக்கு விடுமுறையில் செல்லவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. இவர் கடந்த வாரம் இரண்டு வாரங்களுக்கு விடுமுறை தேவை என அறிவித்திருந்தார்....
போலி கடவுச்சீட்டு வழக்கில் சஷி வீரவன்ச தாக்கல் செய்த பிணை கோரிக்கை மனு நாளை வரை பிற்போடப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவியான சஷி வீரவன்ச கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று காலை முன்னிலையாகியிருந்தார்....
கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். பெஸ்டியன் மாவத்தைப் பகுதியில் இன்று காலை இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது....
பண்டாரகம – அட்டுலுகம பிரதேசத்தில் 9 வயது சிறுமி ஆயிஷாவின் படுகொலை தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சந்தேகநபர்களில் ஒருவர் கீரைத் தோட்டத் தொழிலாளர் என்பது தெரியவந்துள்ளது. அவரது வீட்டிலுள்ள கட்டிலுக்கு...
கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட பண்டாரகம – அட்டுலுகம சிறுமி பாத்திமா ஆயிஷாவின் மரண பரிசோதனைகள் பண்டாரகம ஆதார வைத்தியசாலையில் இன்று இடம்பெறவுள்ளது. அத்துடன் சிறுமியின் கொலை தொடர்பில் பல தரப்பினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். குற்றப்...
நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை அதிகரிக்கும் நோக்கிலேயே 21ஆவது அரசமைப்பு திருத்தத்தைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது எனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். எவ்வாறாயினும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது தொடர்பான விடயத்தில் நேரம் மற்றும்...
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் சமூக ஸ்திரமின்மைக்குத் தீர்வு காணுமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவபீட மாணவர்கள் மீது பொலிஸாரால் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. கொழும்பு – விஹாரமகாதேவி பூங்காவுக்கு அருகாமையில்...
கடற்தொழிலாளர்களின் கருத்துக்களை அறிந்துகொண்ட பின்னரே கச்சதீவு விடயம் பற்றி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு அறிவிக்கப்படும் எனக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். தமிழகத்துக்கு விஜயம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக...