sajith 5
அரசியல்இலங்கைசெய்திகள்

கோட்டா அரசின் நடவடிக்கையால் முழு நாடும் அழிவு! – சஜித் சீற்றம்

Share

கோட்டாபய அரசு ஆட்சிக்கு வந்தவுடனேயே 600 மில்லியன் ரூபா வரிச்சலுகையை வழங்கியதன் மூலம் ஒரு சிறு குழுவினர் ஆறுதல் அடைந்தது எனவும், அதன் விளைவாக இன்று முழு நாடும் அழிந்துள்ளது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் நேற்று (30) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடல் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையில் இடம்பெற்றது.

இந்நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் தொடர்பாக இரண்டரை வருடங்களாக நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் குரல் எழுப்பியதாக இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

இந்தச் சந்திப்பில் சிறிய மற்றும் நடுத்தர தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் கவனத்தில்கொள்ளப்பட்டது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
dengue 1
இலங்கை

அறிகுறிகள் தென்பட்டால் ஆபத்து – உடனடியாக வைத்தியசாலையை நாடவும்.

டெங்கு அறிகுறிகள் தென்படுவோர் தாமதிக்காது உடனடியாக உரிய மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளுமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டு...

chemmani Mass grave
இலங்கை

செம்மணிக்கு செல்ல ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவிற்கு நீதிமன்றம் பச்சைக்கொடி.

ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு, யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதியை...

ஜி.எல். பீரிஸ்
இலங்கை

ஜெனீவாவில் இலங்கைக்கு இதுவும் நடக்கலாம் – எச்சரிக்கும் ஜி.எல். பீரிஸ்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்று நேற்று நடைபெற்றுள்ளது. அங்கு...

Srilankan Airlines
இலங்கை

நிறுத்தப்பட்டது இலங்கை விமான போக்குவரத்து – இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை.

மீண்டும் மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச்சூழல் காரணமாக, குவைத் நாட்டிற்கான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான...