ஜி.எல். பீரிஸ்
இலங்கை

ஜெனீவாவில் இலங்கைக்கு இதுவும் நடக்கலாம் – எச்சரிக்கும் ஜி.எல். பீரிஸ்.

Share

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்று நேற்று நடைபெற்றுள்ளது.
அங்கு முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் கருத்து தெரிவிக்கையில் “உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் உள்ள வெற்றிடங்களை நிரப்பாமல், நீதியரசர்களின் பதவிக்காலத்தை நீட்டிக்க அவசரப்படும் அரசின் போக்கு, இலங்கையின் நீதித்துறை மீதான சர்வதேச நம்பிக்கையை சீர்குலைத்து ஜெனிவாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் “எந்தவொரு ஜனநாயக நாடும் இத்தகைய அரசமைப்புத் திருத்தங்களைச் செய்வதற்கு முன்னர் பொதுமக்களின் கருத்தைக் கோரும். ஐக்கிய இராச்சியத்தில் இத்தகைய ஒரு விடயத்துக்காக 18 மாத காலத்துக்குள் 1,200 கருத்துக்கள் பெறப்பட்டன.

ஆனால், எமது நாட்டில் அரசு எவ்வித வெளிப்படைத்தன்மையுமின்றி இதனைச் செய்கின்றது. வழக்குகள் தேங்கிக் கிடப்பதாகக் கூறி பதவிக்கால நீட்டிப்பைக் கோரும் அரசு, உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் உள்ள நான்கு வீதம் வீதம் வெற்றிடங்களை ஏன் நிரப்பவில்லை?

இந்த வெற்றிடங்களை நிரப்பாமல் வைத்திருப்பதன் மூலம் நீதித்துறை மீதான நம்பகத்தன்மையை அரசே சீர்குலைக்கின்றது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை இலங்கை குறித்து விசேட விசாரணைப் பொறிமுறையை உருவாக்கியுள்ள நிலையில், உள்நாட்டு நீதித்துறை வலுவாக இருப்பதே நாட்டுக்குப் பலம். ஆனால், இன்று நீதித்துறை அப்பட்டமாக அரசியலாக்கப்படுவதால், அது சர்வதேச மட்டத்தில் நாட்டின் நற்பெயருக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

அத்துடன், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவையின் அமர்வில், இந்த விவகாரங்கள் இலங்கைக்கு எதிராகப் பயன்படுத்தப்படலாம்.

தனிநபர் நன்மைக்காக அல்லது குறுகிய அரசியல் நோக்கத்துக்காக முழு நாட்டையும் சர்வதேச நெருக்கடிக்குள் தள்ளுவது கண்டிக்கத்தக்கது.

சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட சிவில் சமூக அமைப்புகள் இந்தப் பதவிக்கால நீடிப்புக்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ள போதிலும், அரசு அவற்றைக் காது கொடுத்துக் கேட்கவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

 

 

 

 

 

Share
தொடர்புடையது
anura kumara dissanayake 1
இலங்கை

பதவி குறித்து கவலை இல்லை – அநுர!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நாட்டின் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டு தனது அதிகாரத்தை பயன்படுத்தப் போவதில்லை என...

சுரேஷ் சலேbyjtujtu
இலங்கை

சுரேஷ் சலேவை மயக்க நிலையில் வைத்து தீவிர விசாரணைக்கு உட்படுத்த முயற்சி!

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலே பரிசோதனைக்கு...

குழந்தையினை கைவிட்டு
இலங்கை

குழந்தையினை கைவிட்டு தப்பியோடிய தாய் – தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ள காவல்துறையினர்.

கண்டி – வத்தேகம நகரில் தனது நான்கு வயது குழந்தையை முச்சக்கர வண்டியில் வந்த தாயொருவர்...

Featured mm
இலங்கை

பெக்கோ சமன் தாயார் படுகொலை – பின்னணியில் பழிவாங்கும் படலம்!

பூஸா அதிஉயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெக்கோ சமன் என்ற நிர்மல பிரசங்க என்பவரின்...