தேசபந்து தென்னக்கோன்
அரசியல்இலங்கைசெய்திகள்

தென்னக்கோனுக்கு 2 வாரங்கள் விடுமுறை! – சட்டமா அதிபரின் உத்தரவு கிடப்பில்

Share

மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் இன்று முதல் இரண்டு வாரங்களுக்கு விடுமுறையில் செல்லவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இவர் கடந்த வாரம் இரண்டு வாரங்களுக்கு விடுமுறை தேவை என அறிவித்திருந்தார்.

விடுமுறைக்கு அனுமதி கிடைத்ததையடுத்து, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் கடமைகளை உள்ளடக்கியதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஜகத் பலிஹக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும் மேல்மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரை மேல் மாகாணத்தில் இருந்து நீக்குமாறு சட்டமா அதிபர் பொலிஸ்மா அதிபருக்கு விடுத்த உத்தரவு இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

சட்டமா அதிபர் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்தாதது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது எனப் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸ்மா அதிபருக்கு சட்டமா அதிபர் உத்தரவு பிறப்பித்து ஒரு வாரத்துக்கு மேலாகியும் இதுவரை அந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படவில்லை.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
acdent 19
இலங்கை

இளைஞர்களின் உயிரைக்குடித்த வேகம்.

  இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் ஹொரணை – மொரகஹஹேன வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

fire 19
இலங்கை

அதிகரித்துள்ள வெப்பத்திற்கு மத்தியில் இரத்மலானை குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல்.

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத்...

eb shok
இலங்கை

மின்சாரம் தாக்கியதில் ஒன்பது மாத குழந்தையின் தாய் பலி.

யாழ்ப்பாணம் – தென்மராட்சி, வரணி பகுதியில் கிணற்றில் வீழ்ந்த கோழிக்குஞ்சை மீட்க முற்பட்ட தினேஷ் நேசமலர்...

wether
இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் நாடு முழுவதும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

இலங்கையினை பொறுத்தவரை இன்று பகல் வேளையில் மனித உடலினால் உணரக்கூடிய எச்சரிக்கை மட்டத்தில் அதிகரித்த வெப்பநிலை...