சுட்டுக்கொலை 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கொழும்பில் துப்பாக்கிச்சூடு! – ஒருவர் சாவு; இருவர் படுகாயம்

Share

கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

பெஸ்டியன் மாவத்தைப் பகுதியில் இன்று காலை இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

30 வயதுடைய நபரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

படுகாயமடைந்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கோட்டைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Arrested With
இலங்கை

கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது...

Weapons
இலங்கை

சிறைச்சாலைக்குள் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் – தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தேங்காய்கள்.

நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது கைதிகள் அதிகாரிகளைத் தாக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்களின்...

ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...

penson
இலங்கை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

  வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக...