பாத்திமா ஆயிஷா
இலங்கைசெய்திகள்

ஆயிஷாவின் பிரேத பரிசோதனை இன்று! – வெளிவருமா உண்மை?

Share

கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட பண்டாரகம – அட்டுலுகம சிறுமி பாத்திமா ஆயிஷாவின் மரண பரிசோதனைகள் பண்டாரகம ஆதார வைத்தியசாலையில் இன்று இடம்பெறவுள்ளது.

அத்துடன் சிறுமியின் கொலை தொடர்பில் பல தரப்பினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் 5 பொலிஸ் குழுக்கள் என்பன விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.

இதற்கமைய குறித்த பகுதியில் உள்ள சி.சி.ரி.வி. காணொளி காட்சிகள் பரிசோதிக்கப்படுவதோடு போதைப்பழக்கத்துக்கு உள்ளானவர்கள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அத்துடன் தொலைபேசி அலைவரிசைகளும் பரிசோதிக்கப்படுகின்றன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 27ஆம் திகதி காணாமல்போயிருந்த சிறுமி பாத்திமா ஆயிஷா அக்ரம், மறுநாள் தமது வீட்டுக்கு அருகில் உள்ள சதுப்பு நிலம் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் தற்போது குடும்ப உறுப்பினர்கள் உட்பட 30 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Elephant Tusks 1
இலங்கை

யானைத்தந்தங்களுடன் நிலவெளியில் ஒருவர் கைது.

  சட்டவிரோதமான முறையில் யானைத் தந்தங்களை வீட்டில் வைத்திருந்த நபரொருவர் திருகோணமலை- நிலாவெளி பகுதியில் விசேட...

low r 1
இலங்கை

உயர்தர பரீட்சையை ஒத்தி வைக்க கோரிய மனு மீதான உத்தரவு.

எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கல்விப் பொதுத்...

are 2 1
இலங்கை

அயலவரை அடித்துக்கொன்ற சந்தேக நபர் கைது.

கடந்த 14ஆம் திகதி இரவு தம்புள்ளை விகாரை சந்தியில் அமைந்துள்ள கடை அறைகளில் தற்காலிகமாக வசித்து...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட்...