பாத்திமா ஆயிஷா
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நீரில் மூழ்கடிக்கப்பட்டே ஆயிஷா படுகொலை! – பரிசோதனை அறிக்கையில் தெரிவிப்பு

Share

களுத்துறை மாவட்டம், பண்டாரகம – அட்டுலுகம சிறுமி பாத்திமா ஆயிஷா நீரில் மூழ்கடிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் எனப் பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், குறித்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படவில்லை எனவும் சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அட்டுலுகம சிறுமி பாத்திமா ஆயிஷா கொலை தொடர்பில் கைதான இருவரில் 29 வயதான நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

தாமே குறித்த சிறுமியை கொலை செய்ததாகத் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கைதான 29 வயதான 3 பிள்ளைகளின் தந்தை வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

களுத்துறை மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு மற்றும் பாணந்துறை பிராந்திய குற்றத் தடுப்புப் பிரிவு இணைந்து மேற்கொண்ட தேடுதலின்போது சந்தேநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த 27ஆம் திகதி காணாமல்போயிருந்த சிறுமி பாத்திமா ஆயிஷா அக்ரம், மறுநாள் தமது வீட்டுக்கு அருகில் உள்ள சதுப்பு நிலம் ஒன்றில் வைத்து சடலமாக மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குறித்த சிறுமியின் மரணம் தொடர்பில் கைதான இரண்டு சந்தேகநபர்களையும் இரண்டு நாட்கள் தடுத்துவைத்து விசாரணை செய்ய பொலிஸாருக்கு நீதிமன்றத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Gotabaya Rajapaksa
இலங்கை

பேசுபொருளாகியுள்ள மாத்தளை மனிதப்புதைகுழி – அகப்படுவாரா கோட்டா?

மாத்தளை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைக்குழி சம்பவம் நடந்த காலப்பகுதியில் அதாவது 1988 மே முதலாம்...

Suresh Sally 16
இலங்கை

சுரேஷ் சலே தொடர்பில் நீதிமன்றில் கூறிய தகவல்!

  சுரேஷ் சலே சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்...

மேர்வின் சில்வா
இலங்கை

மேர்வின் சில்வாவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்.

கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ்,...

Death penalty 22 1
இலங்கை

பதினைந்து வருட கால வழக்கு – மரண தண்டனை தீர்ப்பு.

கடந்த 2011-ஆம் ஆண்டு எல்பிட்டிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில், பாலபிட்டிய உயர்...