கைது
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஆயிஷா படுகொலை: சந்தேகத்தில் இருவர் கைது!

Share

பண்டாரகம – அட்டுலுகம பிரதேசத்தில் 9 வயது சிறுமி ஆயிஷாவின் படுகொலை தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேகநபர்களில் ஒருவர் கீரைத் தோட்டத் தொழிலாளர் என்பது தெரியவந்துள்ளது.

அவரது வீட்டிலுள்ள கட்டிலுக்கு அடியில் இருந்து சேறு படிந்திருந்த நிலையில் சாரம் ஒன்றைப் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

கீரைத் தோட்டத்தை அண்டிய காணியொன்றில் உள்ள சதுப்பு நிலத்தில் இருந்தே, உயிரிழந்த நிலையில் சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது என விசாரணைகளை முன்னெடுத்துவரும் பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமியின் பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளன.

இதேவேளை, மரணம் தொடர்பில் பல பிரிவுகளின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குற்றப் புலனாய்வு அதிகாரிகள் மற்றும் 5 பொலிஸ் குழுவினர் இணைந்து இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அதற்கமைய, அப்பகுதியில் சி.சி.ரி.வி கமராவின் காட்சிகள் மற்றும் போதைப்பொருட்களுடன் தொடர்புடைய நபர்கள் குறித்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அப்பகுதியிலுள்ள தொலைபேசி சமிக்ஞை கோபுரங்களிலும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...