sashi
அரசியல்இலங்கைசெய்திகள்

சஷியின் பிணை மனு நாளை வரை ஒத்திவைப்பு!

Share

போலி கடவுச்சீட்டு வழக்கில் சஷி வீரவன்ச தாக்கல் செய்த பிணை கோரிக்கை மனு நாளை வரை பிற்போடப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவியான சஷி வீரவன்ச கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று காலை முன்னிலையாகியிருந்தார்.

போலி ஆவணங்களைக் கொண்டு, கடவுச்சீட்டைத் தயாரித்தார் எனக் குற்றம் சாட்டப்பட்டிருந்த வழக்கில், சஷி வீரவன்சவுக்கு இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனையும், ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதித்து கடந்த வாரம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட உத்தரவை சவாலுக்கு உட்படுத்தி தமது சட்டத்தரணி ஊடாக சஷி வீரவன்ச மேன்முறையீடு செய்திருந்தார்.

தாக்கல் செய்த மேன்முறையீடு தொடர்பான பரிசீலனையை இன்று வரை கொழும்பு மேல் நீதிமன்றம் ஒத்திவைத்திருந்த நிலையில், சஷி வீரவன்ச இன்று காலை நீதிமன்றில் முன்னிலையானார்.

இதன்போது, அவர் தாக்கல் செய்திருந்த பிணை கோரிக்கை மனு நாளை வரை பிற்போடப்பட்டது.

#SriLankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
சரத் அபேகோன்n
இலங்கை

பதிவி ஏற்கும்போதே ஜனாதிபதியிடம் குறிப்பிட்டேன்.

மத்திய மாகாண ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்து, ஜனாதிபதிக்குத் தான் அனுப்பிய கடிதத்திற்கு இதுவரை எந்தவொரு...

yositha 1
இலங்கை

ஒத்திவைக்கப்பட்டது யோஷிதவின் வழக்கு.

பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு மேல்...

arested 3
இலங்கை

வெளிநாட்டு குண்டுகளுடன் ஒருவர் கைது – கைப்பற்றப்பட்ட ஆயுத தொகுதி !

யக்கல பிரதேசத்தில் வைத்து, ராகமவைச் சேர்ந்த 42 வயதுடைய நபரொருவர் 2 கையெறி குண்டுகள் மற்றும்...

arrest warrant d
இலங்கை

முக்கிய நபர்கள் மீது பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவு.

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண உள்ளிட்ட...