delta
இலங்கைசெய்திகள்

புதுக்குடியிருப்பில் 5 பேருக்கு டெல்டா!

Share

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் டெல்டா தொற்றுடன் 5 பேர் இனம்காணப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் பலரின் மாதிரிகள் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. குறித்த மாதிரிகளின் பரிசோதனை முடிவுகளின்படி வடக்கு மாகாணத்தில் 113 பேருக்கு டெல்டா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

தொற்று உறுதிப்படுத்தப்பட்ட குறித்த மாதிரிகளில் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த 5 பேரின் மாதிரிகள் டெல்டா தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளன.

குறித்த ஐவரில் பொலிஸார் இருவரும் பிரதேசவாசிகள் மூவரும் டெல்டா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...