Maithripala Sirisena
அரசியல்இலங்கைசெய்திகள்

ஏப்ரல் தாக்குதல்! – மைத்திரிக்கு அழைப்பாணை

Share

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதிமான் மைத்திரிபால சிறிசேனவை எதிர்வரும் 14 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் அனுப்பும்படி கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று உத்தரவிட்டார்.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலில் பலத்த காயமடைந்து, கால் ஒன்று அகற்றப்பட்ட ஜேசுரான் கணேசன் மற்றும் அருட்தந்தை சிறில் காமினி ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலனை செய்த நீதவான், மைத்திரிபால சிறிசேனவை வழக்கின் சந்தேகநபராக பெயர் குறிப்பிட்டு அறிவித்தல் அனுப்புவதற்கு உத்தரவிட்டுள்ளார்.

குறித்த காலப்பகுதியில் நாட்டின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சராக செயற்பட்ட மைத்திரிபால சிறிசேனவின் கவனயீனத்தால் தாக்குதல் நடத்தப்பட்டதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் இலங்கை தண்டனை சட்டக்கோவையின் 298 ஆம் சரத்தின் கீழ் அவரை வழக்கின் சந்தேகநபராக பெயர் குறிப்பிட்டு அறிவித்தல் அனுப்புமாறு, முறைப்பாட்டாளர்கள் தரப்பில் ஆஜரான சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன முன்வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான், அறிவித்தல் அனுப்புவதற்கான உத்தரவை பிறப்பித்தார்.

#SriLankaNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...