Wijeyadasa Rajapakshe
அரசியல்இலங்கைசெய்திகள்

21வது திருத்தம் தொடர்பான தீர்மானம் இன்று! – ஐக்கிய மக்கள் சக்தி தெரிவிப்பு

Share

அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பான கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் இன்று அரசுக்கு அறிவிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் ஆராய்வதற்காக சட்டத்தரணிகள் குழுவொன்றை கட்சி நியமித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

21வது திருத்தம் தொடர்பான மூன்று பிரேரணைகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஒன்று ஐக்கிய மக்கள் சக்தியாலும் ஏனைய இரண்டும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவாலும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அமைச்சர் விஜயதாச ராஜபக்சவால் முன்மொழியப்பட்ட திருத்தச் சட்ட வரைவை பெற்றுக்கொண்டதன் பின்னர், ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாட்டை தெரிவிப்பதற்காக சட்டத்தரணிகள் குழு நியமிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

வரைவு தொடர்பாக சில கவலைகள் உள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார். 19வது திருத்தத்தில் உள்ள விதிகளை விட ஜனநாயக அடிப்படைகளை வலுப்படுத்தும் முன்மொழிவுகளை அரசியலமைப்பு திருத்தம் கொண்டிருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
ம்’ என்ற கோஷத்துடனான இப்போராட்டம், நாளை 50 ஆவது நாளில் கால்பதிக்கின்றது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Ranil Namal
இலங்கை

ரணிலுடன் நாமல் பேசியது என்ன?

அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் ராஜபக்ச தரப்பினால் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறன. இந்த நடவடிக்கைகளுக்கு,...

Fire Breaks
இலங்கை

களுத்துறை மாவட்ட செயலகத்தில் தீ – துண்டிக்கப்பட்ட மின்சாரம்.

  களுத்துறை மாவட்ட செயலகத்தில் தீப்பரவல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இன்று காலை சுமார் 8.30...

Prison Clash All Suspects Identified
இலங்கை

மோதலில் ஈடுபட்ட நபர்கள் அடையாளம் காணப்பட்டனர் – மேலதிக நடவடிக்கைகளுக்கு தயாராகும் சிறை அதிகாரிகள்.

  நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் மீதான தாக்குதல் சம்பவங்களுடன்...

Disappearance
இலங்கை

விடுதலை புலிகளின் பெயரில் கடத்தல் மற்றும் கப்பம் பெறல் – கொழும்பில் நடந்த சம்பவங்கள்.

முன்னாள் அரசாங்கத்தின் பாதுகாப்பு தரப்பினர், கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பலர் கடத்தப்பட்ட சம்பவத்தின்...