Fire Breaks
இலங்கை

களுத்துறை மாவட்ட செயலகத்தில் தீ – துண்டிக்கப்பட்ட மின்சாரம்.

Share

 

களுத்துறை மாவட்ட செயலகத்தில் தீப்பரவல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இன்று காலை சுமார் 8.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், இதனால், அலுவலக அதிகாரிகள் உட்பட அனைத்து அலுவலக ஊழியர்களும் வெளியேற்றப்பட்டுள்ளதுடன், யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

தீ விபத்து தொடர்பான தகவல் கிடைத்ததை தொடர்ந்து, தீயை கட்டுப்படுத்துவதற்காக தீயணைப்பு வாகனம் ஒன்று சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஐந்து மாடி கட்டிடத்தின் தரைத்தளத்தில் உள்ள மின்சுற்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக களுத்துறை மாநகர சபை தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

மின்சார அமைப்பு சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
களுத்துறை மாவட்ட செயலகத்தில் ஏற்பட்ட தீ விபத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மின் கசிவு காரணமாகவே தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

தீயை முழுமையாகக் கட்டுப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், சேத விபரங்கள் தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து களுத்துறை மாவட்ட செயலகத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

 

 

 

 

Share
தொடர்புடையது
Accidentkojioh
இலங்கை

திருமணத்திற்கு 2 நாள் வெளிநாடு செல்ல 3 நாள் இளைஞர் விபத்தில் பலி!

மாத்தறை, அக்குரஸ்ஸ பகுதியில் சம்பவித்த கோர விபத்தில் இரண்டு தினங்களில் திருமணத்திற்கு தயாராக இருந்த 25...

ஷிரான் பாசிக்
இலங்கை

வறுமைக்கோட்டிலிருந்து டுபாய் வரை ஷிரான் பாசிக் தொடர்பில் வெளியாகும் உண்மைகள்!

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் தொடர்பில் பல தகவல்கள் தற்போது வெளியாகிய வண்ணம் உள்ளன....

கெஹெலிய
இலங்கை

கெஹெலிய ரம்புக்வெல்ல பிணையில் செல்ல அனுமதி!

இன்றைய தினம் காலை, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, வாக்குமூலமொன்றினை வழங்குவதற்காக சென்றிருந்த நிலையில்...

மஹீல் சேனாரத்ன
இலங்கை

மஹீல் சேனாரத்ன பிணையில் விடுதலை!

இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மஹீல் சேனாரத்ன இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை...