Akila Viraj Kariyawasam
அரசியல்இலங்கைசெய்திகள்

மக்களுக்காகவே மாநாட்டில் பங்கேற்பு! – ஐ.தே.க தெரிவிப்பு

Share

” அரசை பாதுகாப்பதற்கு அல்ல, நாட்டு மக்களுக்காகவே எமது கட்சி சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்கின்றது.” – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ள சர்வக்கட்சி மாநாட்டை புறக்கணிப்பதற்கு பிரதான எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன. எனினும், அதில் பங்கேற்கும் முடிவை ஐக்கிய தேசியக் கட்சி எடுத்துள்ளது.

இது தொடர்பில் வினவியபோதே அகில விராஜ்காரியவசம் மேற்கண்டவாறு கூறினார்.

” சர்வக்கட்சி மாநாட்டை நாம் புறக்கணித்தால் அது அரசுக்கு வாய்ப்பாக அமைந்துவிடும். எதிரணிகள்மீது பழிசுமத்திவிட்டு தப்பிக்க முற்படலாம். அதேபோல கருத்துகளை முன்வைக்க சர்வக்கட்சி மாநாடே பொருத்தமான இடம்.

எனவேதான் நாட்டு மக்களின் நலன்கருதி, யோசனைகளை முன்வைப்பதற்காக எமது கட்சி மாநாட்டில் பங்கேற்கின்றது.” – என்றும் அகிலவிராஜ் காரியவசம் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...