Chili Chicken
இந்தியாசெய்திகள்

சில்லி சிக்கன் சாப்பிடும் போட்டி: 40 பேருக்கு ஏற்பட்ட சிக்கல்!

Share

தமிழ்நாடு – தருமபுரியில் ஊரடங்கை மீறி சிக்கன் சாப்பிடும் போட்டி நடத்திய 40 பேர் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம் – முக்கல்நாய்க்கன்பட்டி கிராமத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரு கிலோ சில்லி சிக்கன் சாப்பிடும் போட்டி நடாத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒரே இடத்தில் பந்தல் அமைத்து, 15 கிலோ சிக்கனை 15 பேருக்கு பரிமாறி போட்டியானது முன்னெடுக்கப்பட்டது.

கொவிட் தொற்று அதிகமாகப் பரவிவரும் நிலை காரணமாக ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட நிலையில், சமூக இடைவெளியின்றி ஒரு கிலோ சில்லி சிக்கனை இளைஞர்கள் அமர்ந்து சாப்பிட்டுள்ளனர்.

அத்துடன், பிரியாணி சாப்பிடும் போட்டியும் நடாத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொவிட்-19 ஊரடங்கு விதிகளை மீறியதாகவும், தொற்று பரவும் வகையில் கூட்டத்தை கூட்டியதாகவும், விழாவின் ஏற்பாடு செய்தவர்கள் மற்றும் போட்டியில் பங்கேற்றவர்கள் உள்ளிட்ட 40 பேர் மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

#IndiaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
முடிவுக்கு வந்தது விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு
இந்தியா

முடிவுக்கு வந்தது விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு.

விவாகரத்து வழக்கு தமிழக முதலமைச்சர் விஜய்க்கும், அவரது மனைவி சங்கீதாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக...

Jaishankar
இந்தியா

இலங்கையில் தொடர்ந்து நடைபெறும் சிறைக்கலவரங்கள் – இந்திய உள்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள தகவல்.

இந்திய உள்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், 2026 ஜூலை மாத இறுதிக்குள் 27 தமிழக கடற்றொழிலாளர்கள்...

arrested woman with handcuffs 1 1
இந்தியா

கலைஞர் கருணாநிதியின் பேத்தி கைது.

திராவிட முன்னேற்றக்கழகத்தின் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி, சென்னை அடையாறு பகுதியில் வங்கி...

PM Modi
இந்தியா

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள முக்கிய தகவல்.

இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகணி தலைமையில், இந்தியாவின் தேர்வு முறைகளை மேம்படுத்துவது தொடர்பாய் ஆராய்ந்து...