gotta
செய்திகள்அரசியல்இலங்கை

பங்காளிக் கட்சிகளை இன்று சந்திக்கிறார் ஜனாதிபதி

Share

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், அரச பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்குமிடையிலான முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இன்று நடைபெறவுள்ளது.

மாலை 5.30 மணிக்கு அலரிமாளிகையில் நடைபெறவுள்ள இச்சந்திப்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் பங்கேற்கவுள்ளார்.

கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கும் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டமைக்கு பங்காளிக்கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தன.

இது சம்பந்தமாக ஜனாதிபதியை சந்திக்கவும் திட்டமிட்டன. எனினும், ஜனாதிபதி சந்திப்புக்கு மறுப்பு தெரிவித்துவிட்டார்.

இதனால் கொதிப்படைந்த பங்காளிக்கட்சிகள், ‘மக்கள் சபை’ எனும் தலைப்பின்கீழ் மக்கள் சந்திப்பை நாளை நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தன. இந்நிலையிலேயே பங்காளிகளை இன்று ஜனாதிபதி அவசரமாக சந்திக்கிறார்.

இச் சந்திப்பையடுத்து மக்கள் சபைக்கூட்டத்தை பங்காளிகள் கைவிடக்கூடும் என தெரியவருகின்றது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Semmani Manhole
இலங்கை

எழுமாறாக தோண்டப்பட்ட குழிகளிலும் எலும்புக்கூடுகள்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட 101 நாள் அகழ்வுப் பணிகளில் மொத்தம் 515 மனித...

Namal
இலங்கை

நாங்கள் மனித நேயத்துடன் மட்டுமே செயலாற்றுவோம் – நாமல்.

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, மொட்டுக் கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்...

Court order
இலங்கை

மீண்டும் நீதிமன்றுக்கு வந்த பவானி வீதி வழக்கு – நீதிமன்று வழங்கிய தீர்ப்பு !

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி காவல்துறையினரின் சார்பில்...

Weaponsgdg
இலங்கை

கலவரத்தினை கட்டுப்படுத்த ஏற்பட்ட தாமதம் – சிறைகளில் உள்ள ஆயுத பற்றாக்குறைகள்

நாட்டில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத...