feathredmnnkn
உலகம்

இத்தாலியின் விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

Share

இத்தாலியின் எட்னா எரிமலை மீண்டும் சீற்றமடைந்து வருவதால், சிசிலி தீவிலுள்ள கெடானியா சர்வதேச விமான நிலையத்திற்கு விமானங்கள் வருவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், சுற்றுலாப் பயணிகளின் பிரதான மையமாக விளங்கும் சிசிலியின் கெடானியா பகுதி வான்வெளியில் எரிமலைச் சாம்பல் படர்ந்துள்ளதால் பாதுகாப்பு கருதி வான்வெளி மூடப்பட்டுள்ளதாக விமான நிலைய நிர்வாகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதனால், கெடானியா விமான நிலையத்திற்கு வரும் அனைத்து விமானங்களின் வருகையும் உள்ளூர் நேரப்படி நண்பகல் 12.00 மணி வரை இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே விமான நிலையத்தில் உள்ள விமானங்களின் புறப்பாடுகள் வழமை போல் இடம்பெற்று வருகின்றன.

ஐரோப்பாவின் உயரமான மற்றும் செயலில் உள்ள எட்னா எரிமலை தொடர்ந்து சீற்றமடைந்து வருவதால், கெடானியா பகுதியில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், எரிமலையின் லாவா குழம்பைப் பார்வையிட சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும் வழிகாட்டிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Share
தொடர்புடையது
ஜப்பானில் கொலை
உலகம்

ஜப்பானில் கொலை செய்யப்பட்ட இலங்கையர்!

ஜப்பானில் கல்வி பயின்று வந்த, 21 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவர் சிபா (Chiba) மாநிலத்தில்...

hourthis red sea Houthi Rebels Attack Cargo Ship In Gulf Of Aden
உலகம்

சர்வதேச கடற்பரப்பில் தாக்கப்பட்ட சரக்கு கப்பல் – உயிரிழந்துள்ள பணியாளர்கள்!

செங்கடலையும் ஏடன் வளைகுடாவையும் இணைக்கும் பாப் அல்-மந்தெப் நீரிணைப் பகுதியில் சரக்குக் கப்பல் ஒன்றின் மீது...

பஷார் அல் அசாத்
உலகம்

முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனை!

மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பில்சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி பஷார் அல்-அசாத் மற்றும்...

parlimen president 2
உலகம்

போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை – ஜனாதிபதியின் தீர்மானம்!

“முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயல்பாட்டு சபையில் போதைப் பொருள் தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனை...