tamilnaadi 5 scaled
ஏனையவை

இன்றைய ராசி பலன் : 16 நவம்பர் 2024 – Daily Horoscope

Share

இன்றைய ராசி பலன் : 16 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 16.11. 2024, குரோதி வருடம் கார்த்திகை 1, சனிக் கிழமை, சந்திரன் மேஷம், ரிஷபம் ராசியில் சஞ்சரிக்கிறார். கன்னி, துலாம் ராசியில் உள்ள சித்திரை, சுவாதி சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று எந்த விஷயத்திலும் கவனமாக செயல்படவும். முக்கிய முடிவுகளை எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. இன்று வீட்டு செலவுகள் திடீரென அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இன்று வியாபாரம் தொடர்பாக அதிக லாபம் கிடைத்து மன மகிழ்ச்சி அடைவீர்கள். தனியார் வேலையில் இருப்பவர்கள் சூழல் சாதகமாக இருக்கும். இன்று கண் சம்பந்தமான பிரச்சனைகள் சந்திக்க வாய்ப்பு உள்ளது. மருத்துவம் தொடர்பான விஷயத்தில் கவனம் தேவை.

ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று குடும்ப சூழல் இனிமையானதாக இருக்கும். உடன் பிறந்தவர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்பு உள்ளது. இன்று மனதில் தேவையற்ற குழப்பம் ஏற்படும். பெற்றோரின் ஆசீர்வாதம், ஆலோசனை தொழிலில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். வியாபாரத்தில் சிறிய லாபத்திற்கான வாய்ப்புகள் உண்டு. வெளிநாட்டில் வசிப்பவர்கள் மூலம் சில நல்ல செய்திகள் தேடி வரும். கல்வியில் உள்ள பிரச்சனைகள் தீரும்.

மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று தொழிலுக்கு மிகவும் உகந்த நாளாக இருக்கும். உங்கள் வேலையில் உள்ள பிரச்சனைகள் தீர்க்க மூத்தவர்களின் ஆலோசனை உதவும். உங்களின் கடின உழைப்பால் திட்டமிட்ட வேலைகள் சரியான நேரத்தில் முடிக்க முடியும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு பெறுவீர்கள். புதிய வேலை மாற்ற நினைப்பவர்களுக்கு சாதகமாக இருக்கும்.

கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று ஆன்மீக சேவை, தொண்டு பணிகளில் நடவடிக்கைகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். இன்று மனக்குழப்பம் நீங்குவதோடு, மன மகிழ்ச்சியை அதிகரிக்கும். பிள்ளைகளின் கல்வி தொடர்பாக சில நல்ல தகவல் கேட்க வாய்ப்புள்ளது. குடும்ப உறுப்பினர்களின் திருமணம் தொடர்பாக நல்ல செய்திகள் தேடி வரும். இன்று குடும்பத்தில் மங்களகரமான நிகழ்ச்சிகள் நடக்கும்.

சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உடல்நிலை சற்று பலவீனமாக இருக்கும். இன்று உணவு விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. உடல்நல பிரச்சனையில் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. வியாபாரத்தில் உங்களுக்கு வரவேண்டிய பணம் திரும்பக் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதில் வெற்றி பெறுவீர்கள்.

கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று சுமாரான கிடைக்கக்கூடிய நாள். வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்பு உண்டு. எதிர்கால திட்டங்கள் வெற்றி தரும். கூட்டு தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நிறைய பணம் சம்பாதிக்க முடியும். உங்களின் நிதிநிலை பலமாக இருக்கும். இன்று பெரிய பணப் பரிவர்த்தனை விஷயத்தில் கவனம் தேவை.

துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்குவதோடு, அது தொடர்பான, எதிர்பார்த்த கடன் கிடைக்க வாய்ப்புள்ளது. குழந்தைகளின் திருமணம் தொடர்பான தடைகள், உறவினர்களின் உதவியால் நீங்கும். மாணவர்கள் உயர்கல்வி தொடர்பாக நல்ல செய்தி கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள்.

விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று சாதகமான பலன் கிடைக்கக் கூடிய நாள். காதல் விஷயத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். துணையுடன் பேசும்போது பேச்சில் இனிமையை கடைப்பிடிக்கவும். தாய் வழி உறவினர்கள் மூலம் சில நன்மைகள் நடக்கும். மாணவர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். ஆசிரியர்கள் மூலம் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். அரசாங்க வேலைகள் முன்னேற்றம் உண்டு.

தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நிலம், வாகனம் வாங்கும் முயற்சியில் உள்ளவர்களுக்கு முன்னேற்றம் தரக்கூடிய நாள். இன்று நேர்மறையான எண்ணத்துடன் செயல்படுவது நல்லது. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும்.

மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வேலையை முடிக்கும் விஷயத்தில் சுறுசுறுப்புடன் எந்த விஷயத்திலும் செயல்படுவது நல்லது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் செய்து முடித்து மகிழ்வீர்கள். புதிய ஒப்பந்தங்களில் சாதக பலன் கிடைக்கும். குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க, நிதானமான அணுகுமுறையும், பேச்சில் இனிமையைக் கடைப்பிடிப்பது நல்லது.

கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் செல்வாக்கு, கௌரவம் அதிகரிக்கும். உங்களின் நிதி நிலை மேம்படும். புதிய சொத்து வாங்கும் ஒப்பந்தங்கள் கைகூட வாய்ப்புள்ளது. பணியிடத்தில் மேலதிகாரிகளின் நல்ல ஆதரவைப் பெறுவீர்கள். இன்று மகிழ்ச்சியான செய்திகள் தேடி வரும். உங்களின் இனிமையான பேச்சு, மரியாதை பெற்று தரும்.

மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று ஆளுமைத் திறன் மேம்படும். உங்கள் உறவினர்கள், நண்பர்கள் மூலம் ஆதரவும், நல்ல செய்திகள் கிடைக்கும். எதிர்கால திட்டங்கள் தொடர்பான செயல்பாட்டில் முன்னேற்றம் ஏற்படும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். பிள்ளைகளின் வேலை தொடர்பாக நல்ல செய்தி கேட்பீர்கள்.இன்று உறவினர்களை சந்தித்தல் அல்லது உறவினர்களின் வருகை வீட்டில் மகிழ்ச்சியை அதிகரிக்கும்.

Share
தொடர்புடையது
Gunmen
ஏனையவை

விமான நிலையத்தில் கைதான கடத்தல் கும்பல்.

இலங்கை குடும்பம் ஒன்றை தாய்லாந்தின் டொன் முவாங் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கஜகஸ்தானுக்கு கடத்த...

zelan 5
உலகம்ஏனையவை

ஐரோப்பாவின் வான் கட்டமைப்பு – ஸெலென்ஸ்கி விடுத்துள்ள அவசர கோரிக்கை!

ஐரோப்பிய நாடுகள் தங்களின் சொந்த வான் பாதுகாப்பு மற்றும் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை உருவாக்கும் முயற்சிகள்...

ஏனையவை

Обзор 1хБет: линия событий на завтра для ставок на спорт

Обзор 1хБет: линия событий на завтра для ставок на спорт Меня зовут...

ஏனையவை

Pinco Casino Güncel Giriş: En İyi Oyun Deneyimi Nasıl Elde Edilir?

Pinco Casino Güncel Giriş: En İyi Oyun Deneyimi Nasıl Elde Edilir? Pinco...