Sumanthiran
ஏனையவை

தனது கருத்துக்கள் மறைக்கப்பட்டுள்ளது- சுமந்திரன்

Share

கடலட்டை பண்ணை அமைப்பதில் பிரதேச சபைகளின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என தான் கூறிய கருத்தை மறைத்து ஒரு பகுதியை மாத்திரம் வெளியிட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.

கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதற்கு பிரதேச சபைகளின் அனுமதிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை இல்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்த கருத்தை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஏற்றுக் கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுதொட‌ர்பாக இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பிய போதே எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அண்மையில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தின்போது,

சம்மந்தப்பட்ட சட்ட பிரதியை காண்பித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அதில் சொல்லப்பட்டிருந்த சட்ட ஏற்பாடுகளை தெளிவுபடுத்துமாறு என்னிடம் கேட்டுக் கொண்டார்.

கடலட்டைப் பண்ணைகளை அமைக்கும் செயற்பாடுகளின் போது, பிரதேச சபைகளின் அனுமதிகளைப் பெற்றுக் கொள்ளத் தேவையில்லை என்பது உண்மை.

ஆனால் பிரதேச சபைகளின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என சட்டத்தில் உள்ளதை அவருக்கு கூறினேன்.

ஆனால் அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் பிரதேச சபைகளின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என நான் கூறிய கருத்தை மறைத்து ஒரு பகுதியை மாத்திரம் வெளியிட்டுள்ளார்கள். அது அரை உண்மையே ஆகும்.

சட்டத்தின்படி கருத்தைப் பெறுவதென்பது அந்த கருத்துக்களை உள்வாங்கி செயற்படுத்துவதே ஆகும் என்றார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 30
ஏனையவை

மின்சாரக் கட்டண உயர்வு: ஏப்ரல் 1 முதல் புதிய கட்டணங்கள் நடைமுறை!

இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக்...

image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...