Coal mining fire in Russia
உலகம்செய்திகள்

சுரங்கத்திற்குள் பாரிய தீ -52 பேர் பரிதாபமாக சாவு

Share

சுரங்கத்திற்குள் ஏற்பட்ட பாரிய தீயால் 52 தொழிலாளர்கள் பரிதாபமாக சாவடைந்துள்ளனர்.

ரஷியாவின் சைபீரியா பிரதேசத்தில் லிஸ்ட்வேஸ்னியா எனும் இடத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட தீயால் 52 தொழிலாளர்கள் பரிதாபமாக சாவடைந்துள்ளனர்.

இச் சுரங்கம் தலைநகரம் மாஸ்கோவில் இருந்து 3,500 கி.மீட்டர் தூரத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு நேற்று நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர்.

சுரங்கத்தின் காற்றோட்டத்துக்காக பல குழிகள் அமைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இக் குழிகளின் ஒரு குழியின் முன் பகுதியில் இருந்த நிலக்கரி தூணில் திடீரென தீப்பிடித்ததால், அத்தீ சுரங்கம் முழுவதும் பரவியது.

இத்தீயில் 52 தொழிலாளர்கள் கருகி சாவடைந்தனர் .

பலர் படுகா யம் அடைந்தனர்.

காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் .

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 49 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அவர்களில் பலருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இவ் விபத்து தொடர்பில் சுரங்க நிறுவன அதிகாரிகள் 4 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக ரஷிய செய்திகள் தெரிவிக்கின்றன.

இவ்விபத்தல் நாடே சோகத்தில் மூழ்கியுள்ளது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
iraan us war
உலகம்

அமெரிக்காவிற்கு பதிலடி வழங்கிய ஈரான் – அமெரிக்க தளங்கள் இருக்கும் நாடுகள் மீது பலத்த தாக்குதல்.

  அமெரிக்க இராணுவ தளங்களை குறிவைத்து, ஜோர்டான், குவைத் மற்றும் கத்தாரில் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானின்...

water cut
உலகம்

பிரித்தானியாவில் வறட்சியை தடுப்பதற்கு பிரித்தானியாவில் புதிய தண்ணீர் கட்டுப்பாடுகள்.

  பிரித்தானியாவின் பல பகுதிகள் வெப்ப அலை காரணமாக வெப்ப சாதனைகளை படைத்துள்ளன. 1976 மற்றும்...

Drug
உலகம்உலகம்

பதின் பருவத்தை கடந்த இளையவர்களை அதிகம் காவு வாங்கும் போதைப்பொருள் – ஜேர்மனியில் அதிர்ச்சி.

  போதைப்பொருட்களால் பலியாகும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் விடயம் ஜேர்மனியில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. அண்மையில், தலைநகர்...

gold 2
வணிகம்இலங்கைஉலகம்

இன்றைய தினத்திலும் தங்கத்தின் விலையில் சரிவு!

தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது இன்றும் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியினை பதிவு செய்துள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள...