உலகம்

பாரிசில் ஏலத்திற்கு வரவுள்ள உலகின் மிகப்பெரிய டைனோசர் எலும்புக்கூடு!

Share
6 3
Share

பாரிசில் ஏலத்திற்கு வரவுள்ள உலகின் மிகப்பெரிய டைனோசர் எலும்புக்கூடு!

உலகின் மிகப் பெரிய மற்றும் முழுமையான டைனோசர் எலும்புக்கூடொன்று பாரிசில் (Paris) ஏலத்திற்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கமைய, 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியிலிருந்த “Vulcain” எனும் டைனோசர் எலும்புக்கூடானது நவம்பர் 16 திகதி ஏலத்திற்கு வரவுள்ளது.

இந்த அபூர்வமான எலும்புக்கூடானது, அமெரிக்காவின் வைமிங் மாகாணத்தில் 2018ல் கண்டுபிடிக்கப்பட்டதுடன் இது 20.5 மீட்டர் நீளம் கொண்டதாக காணப்படுகின்றது.

Vulcain Late Jurassic Morrison Formation என்ற டைனோசர் பழமையான பூமிச் சட்டத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சவுரோபோட் இன டைனோசர் ஆகும்

இது Apatosaurus மற்றும் Brontosaurus இனங்களின் அம்சங்களைக் கொண்டிருப்பதோடு, Apatosaurus ajax மற்றும் Apatosaurus louisae இனங்களின் இடைநிலை இனமாகக் கருதப்படுகிறது.

Vulcain கடந்த ஜூலை மாதம் முதல் பாரிசின் வெளியே உள்ள Château de Dampierre-en-Yvelines மாளிகையில் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது.இதனை பார்வையிட 40,000க்கு மேற்பட்ட மக்கள் வந்துள்ளனர்.

பிரான்சில் உள்ள Collin du Bocage மற்றும் Barbarossa என்ற ஏல நிறுவனங்கள் இந்த ஏலத்தை ஏற்பாடு செய்துள்ளதுடன் ஏற்கெனவே பங்கு முன்பதிவில் 11 மில்லியன் முதல் 22 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை ஏலம் தொடங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த ஏலத்தில் வெற்றி பெறும் அந்த நபருக்கு GPS point, அகழாய்வு வரைபடம், osteological map ஆகியவை வழங்கப்படுவதுடன், அதற்கு புதிய பெயர் சூட்டுவதற்கும் உரிமை கிடைக்கும்.

இந்த டைனோசர் எலும்புக்கூடானது கலை உலகிலும் ஏலத்தில் பெரும் ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

5 8
உலகம்செய்திகள்

இந்தியாவின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் கண்டனம்

இந்தியா மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலை “தூண்டுதலில்லாததும், வெளிப்படையான போர் நடவடிக்கையும்” எனவும் பாகிஸ்தான் கடுமையாக கண்டித்துள்ளது....

6 9
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு இந்தியாவின் பதிலடி! நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட பதிவு

பாகிஸ்தான் மீது இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு...

7 8
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் மீது இந்தியா ஏவுகணை தாக்குதல்

பாகிஸ்தான்(Pakistan) மற்றும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருக்கும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய இடங்களில் ஒன்பது இலக்குகள் மீது ஏவுகணைத்...