26 698084fbda31a
உலகம்

நில ஒதுக்கீடு முறைகேடு: பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு 10 ஆண்டுகள் சிறை!

Share

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு, அரசாங்க நில ஒதுக்கீட்டில் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் இன்று (02) அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.

டாக்காவின் ‘புர்பச்சோல் ராஜுக் நியூ டவுன்’ திட்டத்தின் கீழ், இரண்டு 10-கதா (Katha) பிளாட்களை சட்டவிரோதமாக ஒதுக்கியமை தொடர்பாக ஊழல் தடுப்பு ஆணையம் (ACC) வழக்குகளைத் தாக்கல் செய்திருந்தது.

டாக்கா சிறப்பு நீதிபதி நீதிமன்றம்-4 இன் நீதிபதி ரபியுல் ஆலம், இரண்டு வெவ்வேறு வழக்குகளில் தலா ஐந்து ஆண்டுகள் வீதம் மொத்தம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தார்.

ஹசீனாவின் குடும்ப உறுப்பினர்களுக்கும் இந்த ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது:

ரத்வான் முஜிப் சித்திக் & அஸ்மினா சித்திக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், துலிப் ரிஸ்வானா சித்திக்கு 4 ஆண்டுகள், முகமது குர்ஷித் ஆலம்க்கு 2 ஆண்டுகள் சிறை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது:

அபராதம்: குற்றவாளிகள் அனைவருக்கும் தலா 1 லட்சம் டாக்கா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதனைச் செலுத்தத் தவறினால் மேலும் 6 மாத சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும்.

கடந்த ஆண்டு (2025) ஓகஸ்ட் 5-ஆம் திகதி மக்கள் போராட்டத்தை அடுத்து பதவியைத் துறந்து பங்களாதேஷை விட்டு வெளியேறிய 78 வயதான ஷேக் ஹசீனா, தற்போது இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். நீதிமன்றத்தால் அவர் ‘தப்பியோடியவராக’ ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...

world 219
உலகம்செய்திகள்

அமெரிக்கா – இஸ்ரேலுக்கு ஈரான் இராணுவத் தளபதி கடும் எச்சரிக்கை: கல்லறைக்கே செல்வார்கள்!

ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு முயற்சிகள் ஒருபோதும் வெற்றிபெறாது என்றும், ஈரானைப் பணியவைக்க...

world 210
உலகம்செய்திகள்

அமெரிக்கா – ஈரான் இடையே விரைவில் அமைதி ஒப்பந்தம்? டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே 10 நாள்...