20260203 141546
செய்திகள்அரசியல்இலங்கை

இனவாதமற்ற நாடு என்பது அரசின் போலிப் பிரச்சாரம்! – சுதந்திர தினத்தைக் கரி நாளாக அனுஷ்டிக்க ரெலோ தீர்மானம்.

Share

தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வரும் “இனவாதமற்ற, மதவாதமற்ற நாடு” என்ற கோஷம் ஒரு போலிப் பிரச்சாரம் எனத் தமிழீழ விடுதலை இயக்கம் (TELO) குற்றம் சுமத்தியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சபா குகதாஸ், இலங்கையின் 78-வது சுதந்திர தினத்தை ‘கறுப்பு நாளாக’ (கரி நாள்) அனுஷ்டிக்கும் போராட்டங்களுக்கு ரெலோ கட்சி முழுமையான ஆதரவை வழங்குகிறது.

இலங்கை சுதந்திரமடைந்து பல தசாப்தங்கள் கடந்தாலும், தமிழ் மக்களுக்குச் சுதந்திரம் என்பது பேச்சளவில் மட்டுமே உள்ளது. சிங்கள மக்களுக்கே அந்தச் சுதந்திரம் கிடைத்துள்ளது. ஈழத் தமிழர்கள் இன்றும் அடக்குமுறைக்குள்ளேயே வாழ்கின்றனர் என அவர் தெரிவித்தார்.

இனவாதம், மதவாதத்திற்கு இடமில்லை என அரசாங்கம் கூறிக்கொண்டாலும், தமிழ் மக்கள் இன்னும் உண்மையான சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கவில்லை என்பதை உலகிற்கு உணர்த்தவே இந்த எதிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

 

 

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...