1006733 stalin
செய்திகள்இலங்கை

தமிழக மீனவர்களின் அத்துமீறலைத் தடுக்க ஸ்டாலின் நினைத்தால் முடியும்! – வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் காட்டம்.

Share

இலங்கைக் கடல் எல்லைக்குள் இந்தியக் கடற்றொழிலாளர்கள் அத்துமீறி நுழைந்து முன்னெடுக்கும் அடாவடித்தனங்கள் குறித்து அரசாங்கமும், கடற்றொழில் அமைச்சும் பாராமுகமாக இருப்பது வேதனையளிப்பதாக வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்தக் காரசாரமான கருத்துக்களை முன்வைத்தார்.

இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பாகப் பலமுறை கோரிக்கைகளை முன்வைத்தும், தற்போதைய அரசாங்கமும் கடற்றொழில் அமைச்சரும் மௌனம் காப்பது ஏன் என்று தெரியவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக முதலமைச்சர் (மு.க. ஸ்டாலின்) உண்மையிலேயே நினைத்திருந்தால், இந்தியக் கடற்றொழிலாளர்கள் எல்லை தாண்டி வருவதை இலகுவாகக் கட்டுப்படுத்தியிருக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.

தொடர்ச்சியான இந்திய மீனவர்களின் வருகை மற்றும் அவர்களின் சட்டவிரோதத் மீன்பிடி முறைகளால் வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கவலை வெளியிட்டார்.

யாரிடம் முறையிடுவது என்று தெரியாத நிலையில் நாங்கள் இருக்கிறோம். இந்த அடாவடித்தனம் வடபகுதியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...