862
உலகம்செய்திகள்

4 கி.மீ நீந்தித் தாயையும் உடன்பிறப்புகளையும் மீட்ட 13 வயதுச் சிறுவன்: மேற்கு அவுஸ்திரேலியாவில் நெகிழ்ச்சிச் சம்பவம்!

Share

மேற்கு அவுஸ்திரேலியாவின் ஜியோகிராஃப் விரிகுடாவில் (Geographe Bay), சீற்றமான கடல் அலைகளுக்கு மத்தியில் சுமார் 4 கிலோமீட்டர் தூரம் நீந்திச் சென்று, நடுக்கடலில் தத்தளித்த தனது குடும்பத்தையே காப்பாற்றிய 13 வயதுச் சிறுவனின் வீரம் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று, ஒரு தாயும் அவரது 12 வயது மகன் மற்றும் 8 வயது மகளும் ‘பேடில்போர்டிங்’ (Paddleboarding) விளையாட்டில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வீசிய திடீர் பலத்த காற்றினால், அவர்கள் கரையை விட்டு வெகுதூரம் நடுக்கடலுக்கு இழுத்துச் செல்லப்பட்டனர்.

தனது தாய் மற்றும் உடன்பிறப்புகள் ஆபத்தில் இருப்பதை உணர்ந்த 13 வயது மூத்த மகன், உதவி தேடி கரையை நோக்கித் தனது ‘கயாக்’ படகில் சென்றான். ஆனால், படகில் நீர் புகுந்ததால் துணிச்சலாகக் கடலில் குதித்து நீந்தத் தொடங்கினான்:

சுமார் 4 கி.மீ (2 கடல் மைல்) தூரத்தை அவன் தொடர்ச்சியாக நீந்தினான். முதலில் அணிந்திருந்த ‘லைஃப் ஜாக்கெட்’ வேகத்தைத் தடுப்பதாகக் கருதி, அதைக் கழற்றிவிட்டு அடுத்த இரண்டு மணிநேரம் வெறும் கைகளால் நீந்திக் கரையை அடைந்தான்.

மாலை 6 மணியளவில் கரையை அடைந்த சிறுவன் கொடுத்த தகவலின் பேரில், உலங்கு வானூர்தி மற்றும் மீட்புப் படகுகள் தேடுதலில் ஈடுபட்டன.

சுமார் 14 கி.மீ தொலைவில் ஒரு பேடில்போர்டைப் பிடித்துக்கொண்டு தத்தளித்த தாயையும் மற்ற இரு குழந்தைகளையும் இரவு 8:30 மணியளவில் மீட்புப் படையினர் மீட்டனர்.

மீட்புப்படைத் தளபதி பால் பிரெஸ்லாண்ட், அச்சிறுவனின் முயற்சியை “மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்டது” என்று பாராட்டியுள்ளார். அந்தச் சிறுவனின் அபாரத் துணிச்சல் இல்லையென்றால் ஒரு குடும்பமே கடலில் சமாதியாகியிருக்கும் எனப் பொலிஸார் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...