1792972 ship
உலகம்செய்திகள்

வெளிநாட்டு கப்பல் நைஜீரிய கடற்படையால் சிறைப்பிடிப்பு! – 16 இந்தியர்கள் உட்பட 27 பேர் கைது

Share

நைஜீரியாவில் கச்சா எண்ணெய் திருட்டு தொடர்பாக வெளிநாட்டு கப்பல் மற்றும் அதில் இருந்த ஊழியர்களை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.

நைஜீரியக் கடற்பரப்பில் சட்டவிரோதமாகச் செயல்பட்டு, அனுமதியின்றி கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்ய முயன்றதாக அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. எண்ணெய் வளம் மிக்க நைஜர் டெல்டா பிராந்தியத்தில் உள்ள உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் 27 பேரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் ‘கடற்படையிடம் சிக்கிய கப்பல் ஊழியர்களில் 16 பேர் இந்தியர்கள். திருட்டு மற்றும் பைப்லைன் சேதங்களால் நாள் ஒன்றுக்கு 470,000 பீப்பாய்கள் கச்சா எண்ணெய்யை நைஜீரியா இழக்கிறது. சமீப காலமாக பாதுகாப்புப் படைகள் குற்றவாளிகள் மீதான நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளன.

கடலில் கப்பல்களின் ரோந்து மூலம் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், மேலும் இதுபோன்ற குற்ற நடவடிக்கைகளை வெளிக்கொணர ஒரு துணை பிராந்திய மற்றும் சர்வதேச கூட்டாண்மை எங்களிடம் உள்ளது’ என்றும் கடற்படை செய்தித் தொடர்பாளர் கூறி உள்ளார்.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
tax d
உலகம்

செனட் அவையின் ஒப்புதலுடன் நிறைவேறியது 100 வீத வரி விதிப்பு!

“லிண்ட்சே ஓ கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடைகள் சட்டம் 2026” என அழைக்கப்படும் இந்தச்...

iraan us war
உலகம்

மீண்டும் தீவிரமடையும் தாக்குதல்கள் – பொதுமக்கள் 11 பேர் பலி.

இன்று அதிகாலை ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள், ஏமனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மாரேப் மாகாணத்தை...

pakistan on police attack
உலகம்

பாகிஸ்தானில் நடத்தப்பட்டுள்ள கொடூர தாக்குதல் – 11 காவல்த்துறையினர் பலி.

ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஹங்கு மாவட்டத்தில் அமைந்துள்ள கஸீனா பொலிஸ் சாவடியைக்...

Melania Trump
உலகம்

ஈரானின் அடுத்த இலக்கு – ட்ரம்ப் குடும்பத்திற்கு உச்ச கட்ட பாதுகாப்பு.

ஈரானின் உச்சத் தலைவர் மற்றும் மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்ட கூட்டுத் தாக்குதலுக்கு பின்னர், ஈரானின் முக்கிய...