iraan us war
உலகம்

மீண்டும் தீவிரமடையும் தாக்குதல்கள் – பொதுமக்கள் 11 பேர் பலி.

Share

இன்று அதிகாலை ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள், ஏமனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மாரேப் மாகாணத்தை இலக்கு வைத்து ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சவூதி ஆதரவு இராணுவப் படை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சவூதி அரேபிய தலைமையிலான கூட்டுப் படைகளுக்கும் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மீண்டும் மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையிலேயே இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது.

அத்துடன், ஏமன் தலைநகர் சனாவிற்கு மேற்கே உள்ள பகுதியிலிருந்தே இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டதாக பெயர் குறிப்பிட விரும்பாத இராணுவ அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

மாரேப் நகரின் பல பகுதிகளை இலக்கு வைத்து இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், இதில் உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் ஏற்பட்டிருக்கக் கூடும் எனவும் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சவூதி அரேபியாவின் தென்மேற்கு எல்லைப் பகுதியான நஜ்ரான் பிராந்தியத்தின் மீதும் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக சவூதி தலைமையிலான கூட்டுப் படையின் உத்தியோகபூர்வ பேச்சாளர் மேஜர் ஜெனரல் துர்கி அல்-மால்கி உறுதிப்படுத்தியுள்ளார்.

மேற்படி தாக்குதலானது, பொதுமக்கள் வாழும் பகுதிகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இத்தாக்குதலில் பெண் மற்றும் குழந்தை உட்பட 11 பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ள சவூதி கூட்டுப் படை, ஹூதி அமைப்பினரின் இச்செயலை வன்மையாகக் கண்டித்துள்ளது.

Share
தொடர்புடையது
கொலம்பியா
உலகம்

கொலம்பியாவில் பதிவான நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கானோர் பலி.

கொலம்பியாவின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளதாக சரவதேச ஊடகங்கள்...

ATSB
உலகம்

நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள் – பயணிகளின் நிலை குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் !

இன்று காலை, சிட்னி விமான நிலையத்தில் ஜெட்ஸ்டார் பயணிகள் விமானமும் கட்டார் ஏர்வேஸ் விமானமும் மோதிக்கொள்ளும்...

tax d
உலகம்

செனட் அவையின் ஒப்புதலுடன் நிறைவேறியது 100 வீத வரி விதிப்பு!

“லிண்ட்சே ஓ கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடைகள் சட்டம் 2026” என அழைக்கப்படும் இந்தச்...

pakistan on police attack
உலகம்

பாகிஸ்தானில் நடத்தப்பட்டுள்ள கொடூர தாக்குதல் – 11 காவல்த்துறையினர் பலி.

ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஹங்கு மாவட்டத்தில் அமைந்துள்ள கஸீனா பொலிஸ் சாவடியைக்...