இன்றைய தினம் குருவிட்ட சிறைச்சாலை மற்றும் பல்லன்சேன திறந்தவெளி சிறை முகாமில் ஏற்பட்ட அமைதியின்மை குறித்து விளக்கமளித்த சிறைச்சாலைகள் திணைக்களம், விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
அத்துடன், குருவிட்ட சிறைச்சாலை மற்றும் பல்லன்சேன திறந்தவெளி சிறை முகாமில் இன்று ஏற்பட்ட கைதிகளின் அமைதியின்மை, தற்போது குறித்த அமைதியின்மையானது சிறைச்சாலை அதிகாரிகளால் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த அமைதியின்மையினை கட்டுப்படுத்துவதற்கு இலங்கை பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் உதவியும் பெறப்பட்டதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பின்னர், குறித்த சிறைச்சாலைகளின் பாதுகாப்பிற்காக இலங்கை பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் முப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.