flight
இந்தியாஉலகம்செய்திகள்

மீண்டும் கொரோனா எதிரொலி – சீன விமானங்களுக்கு தடை!!!

Share

சீனா, ஜப்பான், அமெரிக்கா, தென் கொரியா போன்ற நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் வேகமெடுத்து வரும் நிலையில், இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா இன்று அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது இந்தியாவில் கொரோனா பரவலை தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. விழிப்புடன் இருக்கவும், கண்காணிப்பை பலப்படுத்தவும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தவும், முகக்கவசம் கட்டாயம் போன்றவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

தற்போது சீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரசின் உருமாறிய வகையான பிஎப்-7 ஒமைக்ரான் இந்தியாவிலும் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது. எனவே சீனா-இந்தியா இடையிலான விமான போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

சீனாவில் இருந்து இந்தியாவுக்கு மீண்டும் கொரோனா பரவல் ஏற்பட்டு விடாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்தபோதும், சீன விமானங்கள் இந்தியாவுக்கு வருவது தடை விதிக்கப்பட வேண்டும் என்றும் பெரும்பான்மையான இந்தியர்கள் கூறி உள்ளனர்.

சமூக நலன் சார்ந்த லோக்கல் சர்க்கிள்ஸ் என்ற வலைத்தளம் நடத்திய சர்வேயில், சீன விமானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று 10-ல் 7 இந்தியர்கள் (71 சதவீதம்) கருத்து தெரிவித்துள்ளனர்.

#world #india

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் உள்ள தாதியர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

இலங்கையில் மிக விரைவில் தாதியருக்கான பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படும் என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை...

22 9
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையின் மேயரை நியமிப்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

கொழும்பு மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு ஒன்று அடுத்த மாதம்...

20 15
இலங்கைசெய்திகள்

மகிந்தவை திடீரென சந்திக்க சென்ற ரணில்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்....

16 16
இலங்கைசெய்திகள்

தேடப்பட்டு வந்த டீச்சர் அம்மாவுக்கு பிணை அனுமதி

தரம் 5 புலமைப்பரிசில் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பிரத்யேக வகுப்புகளை நடத்தும், ‘டீச்சர் அம்மா’ என்று...