pathan141222 2
சினிமாபொழுதுபோக்கு

மோசமான கருத்துக்கள் வருகின்றன – சர்ச்சைகளுக்கு ஷாருக்கான் பதில்

Share

ஷாருக்கான், தீபிகா படுகோனே ஜோடியாக நடித்துள்ள ‘பதான்’ இந்தி படம் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளிலும் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோனே காவி நிற நீச்சல் உடையில் ஆடிய வீடியோ வெளியாகி இந்துக்கள் மனதை புண்படுத்தி உள்ளதாகவும், படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.

ஷாருக்கானின் கொடும்பாவியை எரித்து போராட்டம் நடந்தது. பாடல் காட்சியில் இடம் பெற்றுள்ள காவி உடை மற்றும் வரிகளை நீக்க வேண்டும் என்று மத்திய பிரதேச உள்துறை மந்திரி நரோத்தம் மிஸ்ரா வற்புறுத்தி உள்ளார். படத்தில் வரம்பு மீறிய ஆபாச காட்சிகள் இருப்பதாக இஸ்லாமிய அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. பதான் படம் திரையிடப்படும் தியேட்டர்களை கொளுத்துவோம் என்று அயோத்தி அனுமன் காரி அமைப்பு எச்சரித்து உள்ளது.

இந்நிலையில் பதான் படம் குறித்து ஷாருக்கான் கருத்து தெரிவித்து உள்ளார். அவர் கூறும்போது, ”பதான் என்ன மாதிரியான படம் என்று கேட்கிறார்கள். பதான் ஒரு தேச பக்தி படம். சமூக வலைத்தளங்களில் மோசமான கருத்துக்கள் வருகின்றன. நான் நேர்மறையாகவே இருக்கிறேன்” என்றார்.

#cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...