glpers
செய்திகள்அரசியல்இலங்கை

‘1978’ யுகத்துக்கு ‘2022’ இல் முடிவு கட்டப்படுமா?

Share

புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணி நிறைவுபெற்றுள்ள நிலையில், இறுதி சட்டமூலத்தை தயாரிப்பதற்காக அது சட்டவரைஞர் திணைக்களத்துக்கு தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.” – என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் பீரிஸ் இந்த தகவலை வெளியிட்டார்.

” 1978 இல் ஜே.ஆர். யுகத்தில் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பே நாட்டில் அமுலில் உள்ளது. 43 ஆண்டுகள் கடந்துவிட்டன.

இக்காலப்பகுதியில் சமூகத்தில் பல மாற்றங்கள் – முன்னேற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

சமூகத்தின் மாற்றத்துக்கேற்ப அரசியலமைப்பிலும் மாற்றங்கள் இடம்பெறவேண்டும்.

நாட்டின் உயரிய சட்டமான அரசியலமைப்பு என்பது கல்லால் செதுக்கப்பட்டதாக இருக்ககூடாது.

நெகிழ்வுத்தன்மை அவசியம்.

எனவே, புதிய அரசியலமைப்பு இயற்றப்படும் என்ற உறுதிமொழியை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச வழங்கினார்.

அந்த பணியை முன்னெடுப்பதற்காக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் த சில்வா தலைமையில் நிபுணர்கள் குழுவொன்று அமைக்கப்பட்டது.

அக்குழுவானது தமது பணியை நிறைவுசெய்துள்ளது.

உத்தேச அரசியலமைப்பு தயாரிக்கப்பட்டுள்ளது. இறுதி வரைபை தயாரிப்பதற்காக அது சட்டவரைஞர் திணைக்களத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நவம்பர் 22 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும். டிசம்பர் 10ஆம் திகதி இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படும்.

எனவே, 2022 ஆம் ஆண்டில் புதிய அரசியலமைப்பு தொடர்பில் அவதானம் செலுத்தும் வாய்ப்பு நாடாளுமன்றத்துக்கு கிடைக்கும்.” -என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...