நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கடந்த 20ஆம் திகதி மாலை பயணித்துக் கொண்டிருந்த போது இடம்பெறவிருந்த பாரிய விபத்தில் நூலிழையில் உயிர்தப்பியுள்ளதுடன், ஆபத்தான சந்தர்ப்பத்தில் உடனடியாக செயற்பட்ட 1969 என்ற வீதி அவசர உதவிக்குழுவினரின் சிறப்பான சேவையை பாராட்டி, தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
ஹர்ஷ டி சில்வாவின் X கணக்கில் குறித்த விடயமானது குறிப்பிடப்பட்டுள்ளது.
வாகனத்தின் சக்கரத்தை மாற்றுவது அவர்களின் உத்தியோகபூர்வ பொறுப்பிற்கு அப்பாற்பட்ட நிலையிலிருந்த போதிலும், அதற்கு இடமளிக்காது அக்காரியத்தையும் அவர்களே செய்து முடித்ததாக பதிவிட்டுள்ளார்.
அத்துடன், இச்சம்பவத்தை அடிப்படையாக கொண்டு, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிப்பதற்கு முன்னர் தமது வாகனங்களின் சக்கரங்களின் நிலை குறித்து முற்கூட்டியே பரிசோதனையில் ஈடுபடுமாறு அவர் சாரதிகளிடம் கோரியுள்ளார்.