Missing Persons
இலங்கை

காணாமல் போனவர்களுக்கு  நடந்தது என்ன ?

Share

இறுதி போரில் இராணுவத்தில் சரணடைந்த 500 பேர் தொடர்பில் இதுவரை எவ்வித தகல்களும் இல்லை. இவ்வாறு காணாமல் போனவர்களின் தாய்மார்கள் கேட்பது “என் பிள்ளைக்கு என்ன நடந்தது?” என்பதுதான்.

வலையொளி தளமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் பல கருத்துக்களை சட்டத்தரணி நிமல்கா பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, 500 பேரை நாங்கள் இராணுவத்தி்டமே ஒப்படைத்தோம். அப்படியென்றால் ஒரு நாடாக அந்தத் தாய்மார்களுக்கு நாம் அளிக்கும் பதில் என்ன? எனவே இந்த விடயங்கள் குறித்தும், பொறுப்புக்கூறல் குறித்தான பொறிமுறைகள், சட்டக் கட்டமைப்புகள் மற்றும் அரசியல் அர்ப்பணிப்பு இருக்க வேண்டும்.

மேலும், இந்த விடயம் ஒட்டுமொத்தமாக சமாதானம் பற்றிய ஒரு விடயம். உதாரணமாக, இப்போது என் மகன் காணாமல் போயிருந்தால் எனக்கு இருக்கும் வேதனை சமாதானத்தைப் பாதிக்கும்.

உங்களால் அதை சாதாரண விடயமெனக் கடந்துபோக முடியாது. தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளை இராணுவத்திடம் ஒப்படைத்ததாக நீதிமன்றத்திலும் கூறியிருக்கிறார்கள். வவுனியா நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு ஒன்று நடக்கிறது.

சீ.டீ.பி பஸ்களில் இராணுவத்தினரின் உதவியுடன் ஏற்றினார்கள். நான் இராணுவத்திடம் கேட்கவில்லை. நீதிமன்றத்திலும் பெயர் பட்டியல் ஒன்றும் சமர்ப்பிக்கப்படவும் இல்லை.

போர் ஒன்று இருந்ததை நாம் ஏற்றுக்கொண்டோம் தானே, அப்படியென்றால் போர்க் குற்றங்களும் நடந்திருக்கும். இப்போது சிலர் சொல்லலாம், இவர்கள் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பில் இருந்தவர்கள், ஆனால் சரணடையவில்லை என்று.

அப்போது கைது செய்யப்படும் போது ஏற்படக்கூடிய சூழ்நிலைகளை புரிந்து கொண்டுதான் மதகுரு ஒருவர் அனைவரிடமும் கலந்துரையாடி சரணடையுங்கள், கடவுள் பார்த்துக்கொள்வார் என்று பெயர் பட்டியல் ஒன்றையும் எடுத்துள்ளார். அந்த மதகுருவும் இன்றில்லை.

எனவே, பயங்கரவாதத்தை அடக்கும் விடயத்திலும் ஒரு குற்றம் நடந்திருந்தால், அந்த குற்றம் குறித்து நாம் விசாரணை செய்ய வேண்டும். போர்க் குற்றம் என்பதற்கு வரும்போது அதில் சில வரைவிலக்கணங்கள் இருக்கின்றன.

போர் செய்வதற்கும் ஒரு சட்டக் கட்டமைப்புக்குள் பரஸ்பரம் இருக்க முடியும் என்ற ஒரு கதை இருக்கிறது. அது எல்.எல்.ஆர்.சி அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து ஆராய்ந்து பார்த்து, இதன் தகவல்களை வெளிக்கொணர்ந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதும், என்ன நடந்தது என்ற உண்மையைக் கண்டறிவதும் அவசியம்.

அப்படியென்றால் ஒரு நாடாக அந்தத் தாய்மாருக்கு அளிக்கும் பதில் என்ன? எனவே இந்த விடயங்கள் குறித்தும், பொறுப்புக்கூறல் குறித்தான பொறிமுறைகள், சட்டக் கட்டமைப்புகள் மற்றும் அரசியல் அர்ப்பணிப்பு இருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...