20220128 104403 scaled
செய்திகள்அரசியல்இலங்கை

உள்ளதையாவது முதலில் அமுல்படுத்தவே கோருகிறோம்! – ஸ்ரீகாந்தா

Share

ஒன்றுமே இல்லாமல் இருக்கும் இடத்தில், சட்ட ரீதியாக அமுல்படுத்துமாறு கூறிய 13 ஆவது திருத்தத்தை முதலில் அமுல்படுத்தினால், அதில் உள்ள சிறிய விடயங்களை என்றாலும் நாம் பெறுவதற்கு முயற்சிக்கலாமென தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.

13 ஆவது திருத்தம் தொடர்பில் தமிழ் கட்சிகள், இந்திய பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதம் தொடர்பில், தெளிவுபடுத்தும் ஊடகவியாளர் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாம் இப்போது என்ன செய்தோம் என்று தெளிவாக கூற வேண்டிய பொறுப்பு உள்ளது. புதிய அரசியல் அமைப்பு வருமா வராதா என்று உறுதியாகக் கூற முடியாது. அப்படி வந்தாலும் அதில் சிங்கள, பெளத்த மேலாதிக்கம் மட்டுமே இருக்கும். இது மட்டும் உறுதி. ஏனென்றால் இது தான் நடந்தது.

எமது கடந்த கால அனுபவம் இது. இந்திய – இலங்கை ஒப்பந்தம் ராஜீவ் காந்தி காலத்தில் எழுத்தப்பட்ட போது தமிழ் மக்களின் தீர்வு தொடர்பில் அன்று வாக்குறுதி எமக்கு வழங்கப்பட்டது.

அதன் உரித்து இந்தியாவுக்கு இருக்கிறது என்பதன் அடிப்படையிலேயே நாம் மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். 13 ஆவது திருத்தம் தமிழ் மக்களின் முழுமையான பிரச்சினைக்கு தீர்வு தரும் என்று ஒரு நாளும் நாம் கூறவுமில்லை. ஏற்றுக்கொள்ளவும் இல்லை.

ஒன்றுமே இல்லாமல் இருக்கும் இடத்தில், சட்ட ரீதியாக அமுல்படுத்துமாறு கூறிய 13 ஆவது திருத்தத்தை முதலில் அமுல்படுத்தினால், அதில் உள்ள சிறிய விடயங்களை என்றாலும் நாம் பெறுவதற்கு முயற்சிக்கலாம்.

ஒன்றுமே இல்லாமல் இருக்கும் இடத்தில் இருக்கிறதை என்றாலும் நாம் பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும்.
ஏனென்றால் எமது தமிழ் மக்களின் இருப்பு தற்போது அழிந்து வருகிறது. அழிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சிங்கள குடியேற்றம் இடம்பெற்று வருகிறது. ஆகவே இருக்கிறதை முதலில் அமுல்படுத்துங்கள் என்று தான் கூறுகின்றோம் – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Tourist Visa
இலங்கை

இலங்கையர்களுக்கு அனுமதி இல்லை!

தாய்வான் வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள புதிய வீசா கொள்கை அறிவிப்பின்படி, இலங்கை பிரஜைகளுக்கான சுற்றுலா வீசா...

dengue 1
இலங்கை

அறிகுறிகள் தென்பட்டால் ஆபத்து – உடனடியாக வைத்தியசாலையை நாடவும்.

டெங்கு அறிகுறிகள் தென்படுவோர் தாமதிக்காது உடனடியாக உரிய மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளுமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டு...

chemmani Mass grave
இலங்கை

செம்மணிக்கு செல்ல ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவிற்கு நீதிமன்றம் பச்சைக்கொடி.

ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு, யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதியை...

ஜி.எல். பீரிஸ்
இலங்கை

ஜெனீவாவில் இலங்கைக்கு இதுவும் நடக்கலாம் – எச்சரிக்கும் ஜி.எல். பீரிஸ்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்று நேற்று நடைபெற்றுள்ளது. அங்கு...