அத்துமீறி இலங்கை கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்கள் அண்மைக்காலமாக அதிகளவில் இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்டு வருகின்றனர்.
கைதாகும் மீனவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டு வரும் நிலையில், அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் ஏலமிடப்படவுள்ளன.
எதிர்வரும் பெப்ரவரி 7 ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு இந்த ஏலம் நடைபெறவுள்ளது.
இதன்படி
பெப்ரவரி 7 ஆம் திகதி யாழ்ப்பாணம் காரைநகரில் 65 படகுகளும்
பெப்ரவரி 8 ஆம் திகதி காங்கேசன்துறையில் 5 படகுகளும்
பெப்ரவரி 9 ஆம் திகதி கிராஞ்சியில் 24 படகுகளும்
பெப்ரவரி 10 ஆம் திகதி தலைமன்னாரில் 9 படகுகளும்
பெப்ரவரி 11 ஆம் திகதி கற்பிட்டியில் 2 படகுகளும்
காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ஏலம் விடப்படவுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தமது படகுகள் ஏலம் விட தீர்மானிக்கப்பட்டுள்ள விடயத்தை மீள் பரிசோதனை செய்யுமாறு தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாவனைக்கு உகந்த நிலையில் காணப்படும் படகுகளை அவற்றின் உரிமையாளர்களிடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
#SriLankaNews
Leave a comment