lXCde1e0G7ygeggbmYlO4CSM1NM
இலங்கைசெய்திகள்

பண்டிகைக் காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளுக்கு ஜாக்பாட்: ஒரே நாளில் 62 மில்லியன் ரூபாய் வருமானம்!

Share

நத்தார் பண்டிகை மற்றும் தற்போது நடைபெற்று வரும் பாடசாலை விடுமுறைக்காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளின் சுங்க வரி வருமானம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

குறிப்பாக கடந்த 27 ஆம் திகதியன்று அதிகபட்சமாக 62 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதுடன் 26ஆம் திகதியன்று 58 மில்லியன் ரூபாயும், 28 ஆம் திகதியன்று 57 மில்லியன் ரூபாயும் வருமானமாகப் பெறப்பட்டது.

நத்தார் தினத்தன்று 54 மில்லியன் ரூபாய் வருமானம் பதிவானது. பண்டிகை கால விடுமுறைக்கு முன்னதாக மக்கள் அதிகளவில் பயணம் செய்தமையால், 24 ஆம் திகதியன்று வருமானம் 61 மில்லியன் ரூபாவாக காணப்பட்டது.

இந்த உயர்ந்த வருமானப் புள்ளிவிபரங்கள், நத்தார் மற்றும் பாடசாலை விடுமுறையை முன்னிட்டு குடும்பங்களும் சுற்றுலாப் பயணிகளும் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குப் பயணம் செய்தமையால் அதிவேக நெடுஞ்சாலைகளின் பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டுகின்றன.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...