20220131 154612m scaled
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அத்துமீறும் இந்திய மீனவர்கள்! – வடமராட்சி மீனவர்கள் வீதி மறியல் போராட்டத்தில்

Share

அத்துமீறும் இந்திய மீனவர்களுக்கு எதிராக யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு மீனவர்கள் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வடமராட்சி சுப்பமடம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களின் மீன்பிடி உபகரணங்கள் இந்திய மீனவர்களால் சேதமாக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று காலை வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே கடந்த நான்கு நாட்களுக்கு முன்னதாக இந்திய மீனவர்கள் படகினால் மோதி கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டுவந்த ஆழியவளை மீனவர்களில் ஒருவரின் சடலம் இன்று கரையொதுங்கியுள்ளது.

இதனையடுத்து வடமாட்சி கிழக்கு மற்றும் வடமராட்சி மீனவர் சங்கப் பிரதிநிதிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபடுமாறு தத்தமது மீனவர்களுக்கு அழைப்புவிடுத்துள்ளனர்.

பல வழிகளிலும் போராடிய தமக்கு எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை என்றும் தீர்வு வரும்வரை வடமராட்சி மற்றும் வடமராட்சி கிழக்கின் அனைத்து வீதிகளையும் முடக்கி போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ள நிலையில் வடமராட்சி, வடமராட்சி கிழக்குப் பகுதிகள் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மீனவர்கள் வீதிகளின் குறுக்கே படகுகளை போட்டுள்ளதுடன் பொதுப் போக்குவரத்து முற்றாக செயலிழந்துள்ள நிலையில் போக்குவரத்தை வழமைக்கு கொண்டு வரும் முயற்சியில் பொலிஸாரும் இராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளனர்.

1a9c992f add6 4641 98c3 f404fc46ac48 1

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Motorcycle Accidnet
இலங்கை

இளைஞரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள்.

களுத்துறை மாவட்டம், மில்லேவ பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 29 வயதுடைய...

eids
இலங்கை

இலங்கையில் பரவலடையும் நோய்கள் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை.

  நாட்டில் எய்ட்ஸ் அல்லாத பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் நோய்த்தொற்றுகள்  பதிவாகியுள்ளதுடன் , குறித்த நோயாளிகள்...

negambo
இலங்கை

அனுர அரசை கவிழ்க்க சிறையில் தீட்டப்பட்ட சதித்திட்டம்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்கும் மாபெரும் சதித் திட்டம் ஏதாவது நீர்கொழும்பு சிறைச்சாலையில்...

preschool kids
இலங்கை

அனைவரும் சமம் – அரசாங்கம் கொண்டுவரும் சிறந்த திட்டம்.

  அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் கலந்து...